சனி, பிப்ரவரி 26

பாகிஸ்தானின் அதிரடி ஆட்டம்.....




இலங்கை - பாகிஸ்த்தான் அணிகளுக்கு இடையே இன்று பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்ற  உலக கோப்பையின், 10 வது போட்டியில்
பாகிஸ்த்தான் அணி மிகுந்த பலத்தபரீட்சையின் பின் வெற்றி பெற்றுள்ளது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவ் அணி, ஐம்பது ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 277 ரன்களை எடுத்தது.
யூன்ஸ் கான், 72 ரன்களையும் மிஸ்பா உல் ஹக் ஆட்டமிழக்காமல் 72 ஓட்டங்களையும் எடுத்தனர்.

பந்துவீச்சில்,  பெரேரா, ஹேரத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

278 என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் தரங்க, டில்ஷான் நிதானமான தொடக்கத்தை கொடுத்தனர்.
தரங்க 33 ரன்களையும், டில்ஷான் 41 ஓட்டங்களையும் எடுத்த போது ஆட்டமிழந்தனர். 14.2 ஓவர்களில் 76 ரன்களை எடுத்திருந்த போது, முதலாவது விக்கெட் சரிந்தது.

அடுத்து களமிறங்கிய மெஹல ஜெயவர்த்தன, சமரவீர இருவரும் வந்த வேகத்திலேயே பவிலியன் திரும்பிய, 21.2 ஓவர்களில் 96 ரன்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து இக்கட்டான நிலையை அடைந்தது இலங்கை அணி. எனினும் அணித்தலைவர் குமார் சங்ககார, எல்.பி.சி சில்வா ஆகியோரின் இணைப்பாட்டம், இலங்கை அணிக்கு நம்பிக்கை கொடுத்தது. 49 ஓட்டங்கள் பெற்றிருந்த போது சங்ககார ஆட்டமிழந்தார். தொடர்ந்து விளையாடிய எல்.பி.சில்வா 57 ஓட்டங்களை எடுத்தார். அவர் 46 வது ஓவரில் ஆட்டமிழந்த போது இலங்கை அணியின் வெற்றி கேள்விக்குரியாது.
எனினும் நுவான் குலசேகர அதிரடியாக களமிறங்கி 14 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டத்தை திசை திருப்பினார். அவர்  2 பவுன்றிகளையும், 1 சிக்ஸரையும் அடித்தார்.

எனினும், 49.5 வது பந்தில் அவர் ஆட்டமிழந்தார். இறுதியில் 50 ஒவர்கள் முடிவில் இலங்கை அணியால் 266 ரன்களையே பெறமுடிந்தது.
துடுப்பாட்டத்தில் பிரகாசிக்காவிடினும், பந்துவீச்சில், டில்ஷான், சங்ககார, சமரவீர, மத்திவ்ஸ் என இலங்கை துடுப்பாட்ட காரர்கள் ஒவ்வொருவரையும் வீழ்த்திய சயிட் அஃப்ரிடி போட்டி நாயகனாக தெரிவானார்.









.

.

உங்கள் கருத்தைக் கூறுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக