ஞாயிறு, பிப்ரவரி 27

சச்சின் புதிய சாதனை : சர்வதேச போட்டிகளில் 98வது சதம்!


இந்திய - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் பெங்களூருவில் நடைபெற்று வரும் இன்றைய போட்டியில், இங்கிலாந்து அணி10 ஓவர்கள் முடிவில்  77 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டை இழந்திருந்தது.


முன்னதாக இந்திய அணி சச்சினின் அதிரடி சதத்துடன் 49.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 339 ஓட்டங்களை எடுத்தது. தனது 47வது ஒருநாள் போட்டி சதத்தை பூர்த்தி செய்த அவர், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பெற்றுக்கொண்ட 98வது சதமாகவும் இது திகழ்கிறது. இதைவிட உலக கிண்ண போட்டிகளில் 5 சதங்கள் அடித்துள்ள முதல் வீரர் என்ற புதிய சாதனையையும் நிகழ்த்தியுள்ளார். இன்றைய போட்டியில் அவர் 6 சிக்ஸர்கள், 10 பவுன்றிகள் அடங்களாக 115 பந்துகளில் 120 ஓட்டங்கள இஎடுத்தார். கௌதம் கம்பீர் 51 ரன்களையும், யுவராஜ் சிங் 58 ஓட்டங்களையும் எடுத்தனர்.

பந்துவீச்சில் ப்ரென்ஸன் 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் இங்கிலாந்து அணி தனது அதிரடியான ஆரம்பத்தை வழங்கிக்கொண்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக