திங்கள், பிப்ரவரி 21

நாம் ஏன் உங்களை தெரிவு செய்தோம் ?

இன்று இலங்கையில் நாளாந்தம் சாராயம் , சிகரட் மற்றும் பியர் பாவனை குறைந்து வருகிறது .அதனால் இதனை உற்பத்தி செய்யும் கம்பனிகள் தங்கள் பொருட்களுக்குரிய கேள்வியை தக்க வைத்துக்கொள்வதற்க்கு பல்வேறு தொழில்  நுட்பங்களை மக்கள் மத்தியில் பயன்படுத்துகிறது .உதாரணமாக  இந்த வியாபார நிறுவனங்கள் இது தொடர்பான தம் உற்பத்தியை  விளம்பரப்படுத்த அதிகமாக திரைப்படங்களை நாடுவது வழக்கம்  என்பது நாங்கள் அனைவரும் அறிந்ததே .

எனவே இங்கு நாம் இந்த இணையத்தளம் மூலமாக எமது தமிழ்ச்சமூகம் மத்தியில் இது தொடர்பான அதாவது சாராயம் சிகரட் மற்றும் பியர் பாவனையை குறைத்தல் பற்றியதான  விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்  அவை தொடர்பான தகவல்களையும் இவை எந்த மாதிரியான வகையில் ஊக்குவிக்க படுகின்றன அதை எப்படி நாம் குறைக்க முடியும்  என்பன தொடர்பான வகையிலும் தகவல்களை வெளியிட தீர்மானித்துள்ளோம் .இதன்மூலம் வளர்ந்து வரும் எமது சமூகத்தில் ஒரு பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதையும் நாம் நம்புகிறோம்.

ஆகவே  இளைஞர்களாகிய   உங்களிடம் இருந்து இது தொடர்பாக உங்கள் மத்தியில் எழும் பிரச்சனைகளையும் மற்றும் உங்களது விமர்சனங்களையும் எங்களுக்கு தெரிவிப்பதன் மூலம்  எமது சமூகத்தில் சிறந்த ஒரு மாற்றத்தை எம்மால்  ஏற்படுத்த முடியும் .

சமூக மாற்றம் என்பது அனைவரும் விரும்புவதே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக