திங்கள், பிப்ரவரி 28

வினாக்களின் முடிவில் விடைகள் அற்ற வினாவாய் நீண்டு கொண்டே செல்கிறாய் நீ ........




அழகான ஒரு மாலைப்பொழுது 
ஆதவன் கை அசைக்கும் அந்த வேளை
அழகிய ஒரு கடற்பரப்பில் 
ஏதோ சிந்தனையில் நான் ........

ஆம்..

நான் ..

உனக்காக என் நினைவுகளை 
சேகரிக்க ஆயத்தாமாகும் அந் நேரம் ......

ஆம் ...
எனக்காக எங்கோ பிறந்த நீயும் 
உனக்காக இங்கே பிறந்த நானும்
நினைவுகளால் வருடப்படும் நேரம் தான் அது......

நீ யார் ??

உனது பெயரென்ன ??

நீ வாசம் செய்வது எங்கே ??

உனக்காக காத்திருக்கும் எனக்கு..... 
எனக்காக காத்திருக்கும் உனக்கு ....

ம்ம்ம்ம்ம்ம்....

நாம் காதலிக்கவில்லை ..
நாம் இன்னும் கண்களால் கதை பேசவில்லை ....
ஆனால் மனத்தால் மட்டும் எப்படி ??

நீயும் நானும் நினைவுகளால் தாலாட்டபடுகிறோம் ...
உனக்கென நீ என்னையும்
எனக்கென நான் உன்னையும்
சேகரிக்க தாயாராகும் நேரம் இது ...

என் நெஞ்சில் 
வாசம் செய்ய இருப்பவனே ... 
ஏதோ ஒரு நாள் 
எங்கோ ஒரு சாலையில் 
நாம் தவற விட்ட ஏதோ ஒரு பயணப்பாதையில் ...
நாம் சந்திப்பு ஆரம்ப மாகி இருக்கலாம் ..

ஆனால் ..

சந்திக்காமலேயே நாம் பிரிந்ததால்த்தான் என்னவோ
இன்று உன் நினைவுகளை நான் சேகரிக்க ஆயத்தமாகிறேன் ..

நீ யார் ?

வினாக்களின் முடிவில் 
விடைகள் அற்ற வினாவாய்
நீண்டு கொண்டே செல்கிறாய் நீ .........

2 கருத்துகள்:

  1. அழகாக வரிகளை கோர்த்திருக்கிறீர்கள் நன்றி...

    பதிலளிநீக்கு
  2. மிக்க நன்றி ..உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன் .

    பதிலளிநீக்கு