புதன், மார்ச் 2

புராணக் கதைகளில் மகா சிவராத்திரி




ஆதியும் அந்தமும் இல்லாதா சிவனை வேண்டி வணக்கும் சிவ விரதங்களுள் சிவராத்திரி விரதம் முக்கிய இடத்தை பெறுகின்றது.இது வருடந்தோறும் மாசி மாதத்தில் கிருஷ்ண பட்ச சதுர்த்தஷி திதியில் சிவபெருமானை குறித்து அனுஷ்டிக்கப்படும் .

இராத்திரி என்பது இருட்காலம் .உலக ஒடுக்க நிலையாகிய இரவு சிவனுக்கே உரியதாகும்.அதனால் அந்த இரவை சிவராத்திரி என்பர்.ராத்திரி என்பது பூசித்தல் என்பதும் ஒரு பொருளாகும் எனவே சிவனை பூசிக்க தகுந்த இரவே சிவராத்திரி என பொருள்படும்.இந்த சிவராத்திரி யானது நித்ய சிவராத்திரி,மாத சிவராத்திரி ,பட்ச சிவாராத்திரி ,யோக சிவராத்திரி என் 5 வகைப்படும் .அவற்றுள் மாசி மாத தேய்பிறை சதுர்த்தியே மாசி மாத மக சிவராத்திரி என அழைக்கப்படும் .இது வருஷ சிவராத்திரி என்றும் அழைக்கபடுகின்றது.

பிரமதேவனும் விஸ்ணு மூர்த்தியும் நானே பிரமம் நானே பிரமம் என ஒருவரோடு ஒருவர் நீண்டகாலம் போர் செய்தனர்.அதனை நிறுத்தும் பொருட்டு தானே பிரமம் என்பதை ஆன்மாக்கள் அறிந்து உய்யும் பொருட்டு பரமசிவன் திருவுளம் இரங்கி மாசி மாதத்து கிருஷ்ண பட்ஸ சதுர்த்தசி திதியும் சோம வாரமும் திருவோண நட்ச்சத்திரமும் கூடிய புண்ணிய தினத்தில் இரவு பதின்நான்கு நாளிகை அளவில் சோதி வடிவமாக தோன்றினார்.அப்பொழுது உங்கள் வலிமையை காண இந்த சோதியின் அடியையும் முடியையும் காணுங்கள் என்று ஒரு அசரீரி கேட்டது .பிரம  விஸ்ணுக்கள் இருவரும் அதனை கேட்டனர் .பிரம அன்னப்பட்சி வடிவமாக சோதியின் முடியையும் விஷ்ணு பன்றியாக அடியையும் காண சென்றனர் .

நீண்டகாலம் சென்றது அவர்களால் எதையும் காண முடியவில்லை .உடலும் உள்ளமும் களைப்படைந்து சோர்ந்து மீண்டனர்.

அந்த வேளை சிவபெருமான் அந்த சோதியின் நடுவே சிவலிங்க வடிவமாக தோன்றி பின்னர் அந்த இலிங்கத்தில் இருந்து நீல கண்டமும் முக்கண்ணும் ,மான்,மாலு அபயம் வரதம் பொருந்திய கரங்களும் கொண்டு வெளிப்பட்டு காட்சி கொடுத்தருளினார் .அந்த இலிங்கத்தில் இடப்பக்கத்தில் நின்று விஷ்ணுவும் வலப்பக்கத்தில் நின்று பிரம்மா தேவரும் தரிசித்தனர்.மற்றைய தேவர்களும் அந்த வடிவத்தை கண்டு வணங்கி நிற்க பரமசிவன் ஒரு முகூர்த்தகாலம் தரிசனம் தந்து மீண்டும் அந்த சோதியில் மறைந்தருளினார் .சிவன் அந்த சோதியின் நடுவே லிங்க்கோட்பவராகதோன்றிய இரவு சிவராத்திரி என பெயர் பெற்றது . 

சிவராத்திரி விரதம் விளக்கும் புராண கதைகளில் மேற்க்கூறிய கதையே வழக்கத்தில் அதிகமாக கூறப்பட்டு வருகின்றது.



சிவராத்திரி விரதத்துடன் தொடர்புடைய மற்றொரு கதையினையும் பார்ப்போம் என்றால் உலக முடிவாகிய ஊழிகாலத்தில் உலகம் அழிந்து யாவும் சிவபெருமானுள் ஒடுங்கியது .அந்த காரம் சூழ்ந்த அந்த இருளில் பார்வதி தேவியார் ஒடுங்கிய யாவும் மீண்டும் தரும்படி சிவபெருமானை ஆகமங்களில் கூறியுள்ளபடி நான்கு காலம் வழிபட்டாள்.அந்த வழிபாடு பிரார்த்தனை என்பவற்றால்  இறையருளை பெற்றார்.இந்த இரவில் விரதம் இருப்பவர் எவராயினும் அவர்களுக்கு மோட்ச்ச்சத்தை அருள்க.என்று இறைவனிடம் வேண்டினார் இறைவனும் அந்தவாறே அருளி நின்றார்.

இதுதான் சிவாரத்தி விரதம் உணர்த்தும்புராண
க்கதைகளாக இந்து மக்களிடையே இன்றும் நிலவி வருகின்றது.

3 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரம், புராணக் கதை அருமை. இந்தக் கதையினை விளக்கும் வகையில் ‘செங்கணானும் பிரம்மனும் தம்முள்ளே.. என்று தொடங்கும் ஒரு தேவாரமும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    பதிலளிநீக்கு
  2. மிகவும் நன்றி சகோதரம் நிருபன் ..
    தங்கள் தகவலுக்கும் நன்றி.அடுத்துவரும் சிவராத்திரி இக்கு தங்கள் தகவலையும் இணைத்து இன்னும் மெருகு கூட்டி போடலாம் என் எண்ணியுள்ளேன் ..

    பதிலளிநீக்கு