ஞாயிறு, மார்ச் 27

மணிரத்னத்தின் தரைவழி பயணம்


ராஜஸ்தானில் துவங்கி, கன்னியாக்குமரி வரை ஒரு மாபெரும் தரைவழி பயணத்தை நடத்திவிட்டு திரும்பியிருக்கிறார் மணிரத்னம்.
பார்க்கதான் அமைதி. படம் எடுக்க இறங்கிவிட்டால் புயல்வேக பாய்ச்சல் காட்டுவது தான் மணியின் ஸ்டைல்.


பலரையும் பிரமிக்க வைக்கும் அவரது அசுர உழைப்பு மீண்டும் பொன்னியின் செல்வனுக்காக ஆரம்பித்திருக்கிறது. லொக்கேஷன் ஹண்ட்டிங் என்பார்கள் சூட்டிங் ஸ்பாட் தேடி அலைவதை!
இப்படம் சரித்திர பின்னணியை கொண்ட படம் என்பதால், ராஜஸ்தான் அரண்மனைகளை முதலில் சென்று நோட்டம் விட்டாராம் மணிரத்னம். அப்படியே காரிலேயே கிளம்பி கன்னியாக்குமரி வரைக்கும் லொக்கேஷன் பார்த்து முடிவு செய்தாராம்.

இப்படி பயணம் சென்ற நேரத்தில் கிடைத்த இடத்தில் சாப்பாடு. மிகமிக சுமாரான லாட்ஜ்களில் கூட தங்குவது என்று உடன் சென்ற டீமுக்கு பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தினாராம் அவர்.

2 கருத்துகள்: