வியாழன், மார்ச் 24

பிரபல நடிகையை எதிர்த்து ஏ.ஆர்.ரகுமான் நடவடிக்கை


பிரபல இந்திய நடிகை கத்ரினாகைப் நடித்த விளம்பர படமொன்று சமீபத்தில் ரிலீசானது. இதில் ஸ்லம்டாக் மில்லினர் பாடலை பயன்படுத்தி இருந்தனர். இந்த விளம்பரத்தை பார்த்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அதிர்ச்சியானார். 

பாடலின் முழு உரிமையும் ரகுமானிடம் உள்ளது. பயன்படுத்த அனுமதி பெறவில்லை. இதையடுத்து அப்படத்துக்கு எதிராக வழக்கு தொடர ஏ.ஆர்.ரகுமான் முடிவு செய்துள்ளனர். இதுபற்றிய சட்ட விவகாரங்களை கவனிக்கும்படி தனது வக்கீல்களுக்கு உத்தரவிட்டு உள்ளார். 

ரகுமான் தரப்பில் இதுபற்றி கூறும்போது, "விளம்பர படத்தை தயாரித்தவர்களிடம் வக்கீல்கள் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டு வருகிறார்கள்.

விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். கத்ரினாகைப்பும் ஏ.ஆர்.ரகுமானும் ஏற்கனவே ஆதரவற்ற குழந்தைகளுக்கு நிதி திரட்டுவதற்கான `ஆல்பம்` ஒன்றில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

1 கருத்து: