ஞாயிறு, மார்ச் 27

உலக கோப்பை ஆசிய நாடொன்றின் கரங்களிலா?

இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று (சனிக்கிழமை) ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்ற இறுதி காலிறுதி போட்டியில் இலங்கை அணி எவ்வித விக்கெட் இழப்புமின்றி இலகு வெற்றி பெற்றது.

இலங்கையின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான தரங்க, டில்ஷான் ஆகியோரின் அதிரடி இணைப்பாட்டத்தினால், 39.3 பந்துகள் முடிவில் 231 ரன்களை அவ்வணி பெற்றுக்கொண்டதுடன், இருவரும் தத்தமது சதங்களையும், பூர்த்தி செய்துகொண்டனர்.

தரங்க ஆட்டமிழக்காமல் 101 ரன்களையும், டில்ஷான் ஆட்டமிழக்காமல் 108 ரன்களையும் எடுத்துக்கொண்டனர். இதன் மூலம்  காலிறுதி போட்டியில் இலங்கை அணி, நியூசிலாந்துடன் மோதும் வாய்ப்பை பெற்றுள்ளது.

இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 229 ரன்களை எடுத்தது. ட்ரோட் அதிக பட்சமாக 86 ரன்களை எடுத்துக்கொண்டார்.

1996 ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை போட்டிகளிலும் இங்கிலாந்து அணியை காலிறுதியில், இலங்கை தோற்கடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இன்றைய தோல்வியின் மூலம் உலக கோப்பை போட்டிகளிலிருந்து வெளியேறும் இங்கிலாந்து அணி, கிரிக்கெட்டின் தாயகமாக இருந்தும் உலக கோப்பையை கைப்பற்ற முடியாத துரதிஷ்ட்டத்தை மீண்டும் நிரூபிக்கும் சந்தர்ப்பமாக இது அமைந்துவிட்டது.
மேலும் அடுத்து நடைபெறும் அரையிறுதி போட்டியில் இலங்கை - நியூசிலாந்து அணியினை வீழ்த்துமாயின், இறுதி போட்டியில் இரு ஆசிய அணிகளே மோதும் நிலை ஏற்படும். இதன் மூலம் ஆசிய நாடுகள் ஒன்றிணைந்து நடத்தும் இம்முறை உலக கோப்பை, இறுதியில் ஆசிய நாடொன்றுக்கே கிடைக்கும் சந்தர்ப்பமும் உருவாகும் சாத்தியம் அதிகரித்துள்ளது.

அரையிறுதி போட்டிகளுக்கான விபரங்கள் :


இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் முதலாவது அரையிறுதி போட்டி வரும் மார்ச் 29ம் திகதி செவ்வாய்க்கிழமை இதே, ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடக்கிறது.

இரண்டாவது அரையிறுதி போட்டி, மார்ச் 30 புதன்கிழமை, இந்தியாவின் மோஹாலி மைதானத்தில் நடைபெறுகிறது. இறுதிப்போட்டி ஏப்ரல் 2ம் திகதி மும்பையில் நடைபெறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக