புதன், மார்ச் 23

காதலுக்கு கண்கள் இல்லை யாரோ சொன்னாரே ..பெட்டி ஏர்ஸ்கின் என்ற பாட்டிக்கு வயது 90, ரொபின் டிரீமென் என்ற பாட்டனுக்கு வயது 73. இருவரும் இப்போது பாட்டனும் பாட்டியுமல்ல. 

புதுமணத் தம்பதிகள். இவர்கள் இருவரும் 2003ம் ஆண்டு ஓய்வுபெற்றோருக்கான ஒரு வதிவிட இல்லக் கட்டிடத் தொகுதியில் சந்தித்துக் கொண்டனர். 

இருவரும் சாதாரணமாகப் பேசிப் பழக ஆரம்பித்தனர். ஆனால் அது காலப்போக்கில் இருவருக்குமிடையில் காதலாக மலர்ந்து விட்டது. 

பின்னர் 2009ல் ரொபின் தனது காதலை ஏர்ஸ்கினிடம் வெளிப்படுத்தினார். அதை அவரும் ஏற்றுக்கொள்ள விடயம் திருமணத்தில் முடிந்தது. கடந்த சனிக்கிழமை இருவரினதும் குடும்பத்தவர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் எக்ஸ்மவுத் நகர மண்டபத்தில் திருமணம் இடம்பெற்றது. 


இவ்வாண்டு பிற்பகுதியில் இந்தத் தம்பதி பிரிட்டனில் தேன்னிலவு பயணத்துக்கும் திட்டமிட்டுள்ளனர். இந்த வயதில் திருமணம் முடிப்பது வழமைக்கு மாறானது தான். 

ஆனால் அது உலகில் நடக்காத ஒன்றல்ல. எமது உறவுமுறை முன்னேற்றத்தின் இயல்பான ஒரு கட்டமாகவே இந்தத் திருமணம் நடந்துள்ளது என்று மணமகன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக