ஞாயிறு, மார்ச் 27

மொகாலியில் இந்திய அணி வீரர்கள்


பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் பங்கேற்க இந்திய வீரர்கள் நேற்று மொகாலி வந்தனர்.
விமான நிலையத்தில் இருந்து அனைவரும் பலத்த பாதுகாப்புடன் ஓட்டலுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இந்திய வீரர்கள் இன்று முதல் வலை பயிற்சியில் ஈடுபட உள்ளனர். அரையிறுதி போட்டியை காண பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் அதிபர் மற்றும் பிரதமருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதனால் பாதுகாப்பு கூடுதலாக பலப்படுத்தப்பட்டுள்ளது. இரு அணி வீரர்களும் தங்கியுள்ள ஓட்டல் மற்றும் மைதானம் ஆகிய இடங்களில் சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிகமான பொலிசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக