புதன், மார்ச் 23

தடுமாறும் மேற்கிந்தியதீவுகள்..மைதானத்தை வளைத்து எடுக்கும் பாகிஸ்தான் ..


உலக கோப்பை கிரிக்கட் போட்டிகளில் காலிறுதியில் இன்று முதலாவது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி பாகிஸ்தான் அணியை எதிர்த்தாடுகிறது .

நாணய சுழற்ச்சியில் வெற்றி கொண்ட மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பு எடுத்தாட தீர்மானித்து களத்தில் இறங்கியது.

பாகிஸ்த்தான் அணியினரின் மிகத்திறமையான பந்துவீச்சில், 112 ரன்களுக்குள் சுருண்டது மே.இந்தியா அணி. அதிகபட்சமாக சந்தரபோல் ஆட்டமிழக்காமல் 44 ரன்களையும், சர்வான் 24 ஓட்டங்களையும் எடுத்தனர்.
சயிட் அப்ரிடி தனது மிகத்திறமையான பந்துவீச்சில் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். தற்போது பதிலுக்கு துடுப்பெடுத்தாட பாகிஸ்த்தான் அணி களமிறங்கியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக