வெள்ளி, மே 6

படமாகும் ரஜனி வாழ்க்கை ..இந்திய சூப்பர் ஸ்டார் என்ற பெருமைக்குரிய ரஜினியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது, தமிழில் அல்ல இந்தியில்! இந்தியாவில் நடிகர் ஒருவரின் முழு வாழ்க்கை வரலாறு சினிமாவாக எடுக்கப்படுவது இதுவே முதல்முறை. ரஜினியின் அனுமதியுடன் ரஜினி வாழ்க்கையை சினிமாவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் அதுல் அக்னிஹோத்ரி. பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர்.

இதுகுறித்து அதுல் அக்னிஹோத்ரிக்கு நெருக்கமானவர்கள் கூறுகையில், ரஜினி சார் அனுமதியோடு இந்தப் படம் எடுக்கப்பட உள்ளது. கிட்டத்தட்ட எல்லாமே முடிவாகிவிட்டன. விரைவில் படம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகும்.

இந்தப் படத்தில் நடிப்பவர்கள் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லையாம். ரஜினியின் முக அமைப்யையொத்த சில புதுமுகங்களைத் தேர்வு செய்துள்ளார்களாம். ரஜினியின் உடல்மொழி, மேனரிஸங்கள் யாருக்கு சரியாக வருகிறதோ அவரை ரஜினியாக நடிக்க வைக்கப் போகிறார்களாம். படத்துக்கு ரஜினியின் முன்னுரையைப் பெறவும் திட்டமுள்ளதாம்.

பல வெளிநாட்டு விளம்பரப் படங்களை இயக்கிய லாயிட் பாப்டிஸா என்ற இயக்குநர்தான் ரஜினி படத்தை இயக்கப் போகிறாராம் .

இந்தியாவில் இதுவரை எந்த சினிமா கலைஞரின் வாழ்க்கை வரலாறும் முழுமையாகப் படமாக்கப்பட்டதில்லை. முன்பு, பிரபல பாடகர் அமரர் கிஷோர் குமாரின் வாழ்க்கையைப் படமாக்க முயன்றனர். ஆனால் பின்னர் அந்த முயற்சி கைவிடப்பட்டது நினைவிருக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக