வெள்ளி, மே 6

வானம்


  இன்னும் சிந்திக்கலாம் .


"எவண்டி உன்னை பெத்தான் என் கை இல கிடைச்சால் செத்தான் "

இதுதான் திரைப்படத்தில் முதல்ப்பாடல் .ஐந்து வேறு வாறான கதைகள் இறுதிவரை பார்ப்போரின் எண்ணங்களை ஒரு தேடலுடனேயே அழைத்துக்கொண்டு படம் முடிவு வரை அழைத்து  செல்கிறது .இந்த ஐந்து கதைகளின் காதாபத்திரங்களும் சந்திக்கும் இடம் தன கதையின் கிளைமாக்க்ஸ் .

"தெய்வம் வாழ்வது எங்கே தவறுகளை உணரும் மனித நெஞ்சில் " என கதையிலேயே வரும் காதாபாத்திரங்கள் தவறுகளை உணரும் வகையில் அழகாக கதை அமைத்திருக்கிறார்கள் திரைப்படத்தின் பின்னணி யாளர்கள் .நா .முத்துக்குமார் தான் வரிகளின் சொந்தகாரர் .மனிதர்கள் அனைவரும் தவறுகளை உணர வேண்டும் அப்போதுதான் அவன் மனிதன் ஆகிறான்  என அழாகாக இறுதிவரை அனைவரும் விளங்கும் படியாக கதையை அமைத்திருக்கிறார்கள் .

பணக்காரனாக பிறக்க முடியாத சிம்பு பணக்கார பெண்ணை காதலிப்பதும் சிம்புக்கு நண்பனாக சந்தானம் தோன்றுவதும் வழமையான திரைப்படங்களின் போக்குத்தான் .பணக்கார பெண்ணாக தோன்றும் இளம் குருவி ஹன்ஷிகா சிம்புவிடம் காதல் வசப்படுகிறார் .பணக்கார அமுல் பேபி யாக அவர் தோன்றுவதும் இருவரும் மாறி மாறி பேபி பேபி என்று அழைப்பதும் இருவரின் காதல் உணர்வுகளை மிகைப்படுத்தி காட்டுகிறது.

சிங்கார நடைபோட்டு இளசுகளின் மனசை கொள்ளையடித்து உதடுகளில் புன்னகையோடு அழகாக தோன்றுகிறார் அனுஷ்க .சரோஜா என்றா அப்பிடி ஒரு  மவுசு .விலைமாதுவா க படம் முழுவதும் வலம் வருகிறார்.புது கம்பனி தொடங்கும் கனவுகளுடன் சென்னை நோக்கி பறக்கிறார்.

இளம் நங்கைகளின் கனவு நாயகனாக தோன்றும் பரத் கதையில் தனக்கும் ஒரு பங்கை பெற்றுக்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.ஒரு நாள் தன்னை உலகம் புகழும் என்ற லட்சியத்தோடு வானத்துடன் தானும் பயணிக்கிறார்.திரைப்படத்தின் ஆரம்பத்திலேயே புகைத்தலும் மதுபாவனையும் உடலுக்கு தீங்கு எனக்காட்டும்  திரைப்படக்குளுவினர்  படம் எங்கிலும் அவரை புகைத்தல் இதற்காகவே பயன்படுத்தியமைதான் ஏன் என்று புரியவில்லை .

திரையங்கினுள் திரைப்படத்தை திரையிட்டதும் கம்பனிக்கு விளம்பரம் போல் புகைத்தலை திரைக்கு அழாகாக விட்டு செல்கிறார் பரத் .திரையில் காண்பிக்க படும் அப் போலி வேஷங்கள் பணத்திட்காகத்தன் என்பது இன்றைய இளம் சமுதாயத்திற்க்கு வெட்ட வெளிச்சம் .என்பது நாம் அறிந்த உண்மை.ஐந்து திசைகளில் செல்லலும் அக் கதைகளில் பரத்தின் கதை மட்டும் புகைத்தலை உள்ளடக்கியே செல்கிறது .கதையின் ஆரம்பத்தில் உடல் நலத்திற்க்கு தீங்கு என கூறும் திரைப்படக்குளுவினர் அவரை மட்டும் ஏன் இப்படி காண்பித்தனர் என்பது சிந்திக்க முடியாத புரியாத புதிராக காணப்படுகிறது.

சரண்யா தன மாமா தனது மகன், வட்டிக்காரன் தொல்லை,மகனை படிக்க வைக்க வேண்டும்,கடனை அடைக்க வேண்டும் என தனது கிட்னியை விற்க முனைகிறார். 

திரையில் தோன்றும் பிரகாஸ்ராஜ் இஸ்லாம் மதம் அவருக்கு ஜோடி சோனியா அகர்வால்.தனது தம்பியை பறி கொடுக்கும் பிரகாஸ்ராஜ் அவனை தேடி சென்னை நோக்கி வருகிறார்.இவைதான் வானத்தில் தோன்றிய அந்த பறவைகள் .அதாவது ஐந்து கதைகள் .

இந்த கதையை தெரிவு செய்த சிம்பு விக்கு பாராட்டுகளை தெரிவிக்காலம் .இளைய நடிகனாய் சமூகத்திற்க்கு நல்ல கருத்தை சொல்லி உள்ளார் .சிம்புவும் சந்தானமும் சொல்லும் காமடிகளும் அனைவரையுமே திரையரங்கில் சிரிப்பில் ஆழ்த்தியது. எவண்டி உன்னை பெத்தன் அனைவரின் காதுகளுக்கும் விருந்தளிக்கும் வகையில் அமைந்திருந்தது .பாடல் முடிந்ததும் இன்னும் இசைத்தட்டு சுழன்றால் என்ன என்றவாறு அனைவரின் மனங்களையும் கொள்ளை கொண்டது.


சரோஜாவாக வரும் அனுஷ்காவை காமடி நடிகர் பிரமானந்தா என்னை கலியாணம் செஞ்சுக்க என்று சொல்வதும் பதிலுக்கு  அனுஷ்கா குள்ளக்கத்தரிக்கை போல இருக்கும் உன்னையா என்று சிரிப்பதும் அதற்க்கு அவர் நான் "சிங்கம் மாதிரி உயரம்" என்று கூறி கதிரையில் ஏறி நின்று தனது உயரத்தை காட்டுவதும் சிங்கம் சூரியா வை நினைவில் கொண்டு வர திரையரங்கே சிரிப்பில் அதிர்ந்து போனது .

வானம் ஒரு நல்ல கதை என்று சொன்னாலும் இதில் சொல்ல வேண்டியது மருத்துவமனையில் தீவிரவாதிகள் மக்களை கொள்ளும் கொடூரம் தான்.பார்ப்போரர் கண் கலங்க வைக்கும் படியாக அமைந்திருந்தது.

தத்துவம் பேசி வரும் சில பெரிய நடிகர்கள் கூட கமர்சியல் ஆட்டம் போட்டு கொண்டு இருக்க இளைய நடிகனான சிம்பு இதனை தேர்ந்து எடுத்தமை மிகவும் மகிழ்ச்சியான ஒன்றுதான் .

திறம்பட சமூகத்திற்க்கு " தெய்வம் வாழ்வது எங்கே தவறுகளை உணரும் மனித நெஞ்சில் " என படம் முழுக்க கூறினாலும் இளம் சமுதாயத்திற்க்கு நல்ல கருத்தை கூறி இருந்தாலும் சமூகத்திற்கு அவசியம் இல்லாத புகைத்தலை படத்தில் காண்பித்தமை அவசியம் அற்ற ஒன்று .நல்ல கருத்தை சொல்ல முயலும்  இந்த மாதிரியானா படங்கள் சமூகதிட்க்கு தேவையானதை  விட்டு தேவையற்ற  காட்சிகளை கொண்டு வருவது பாராட்ட முடியாத ஒரு விடயாமாக அமைந்திருந்து .திரைப்படத்தின் ஆரம்பத்தில் புகைத்தலும் மதுபாவனையும் உடலுக்கு தீங்கு என ஆரம்பித்து விட்டு படம் எங்கிலும் இப்படியான காட்சிகள்  திரைப்பட ரசிகர்களை பெரும் சங்கடத்துக்குள் உள்ளாக்குவதுபோல் காணப்பட்டது .

வானம் -  இன்னும் சிந்திக்கலாம் ..

2 கருத்துகள்:

  1. வாழ்துக்கள். மிகவும் அழகாகவும் ஆழமாகவும் திரைவிமர்சனம் செதுக்கப்பட்டுள்ளது.
    புகைத்தல் தொடர்பான காட்சிகள் பற்றிய விமர்சனம் இங்கு சுட்டி காட்டபட்டுள்ளது மேலுமொரு சிறப்பம்சம்.

    எதுஎப்படியோ இதை வாசித்து முடித்தவுடன் படத்தை பார்க்கவேண்டும் என்ற ஆவல் என்னுள் எழுகின்றது.

    பதிலளிநீக்கு
  2. After long time in Tamil cinema history.. I see now a social motive movie "Vaanam"
    Vaanam looks all set to become one of the most-talked-about films in 2011. And we have three reasons to it. It is an early bird in the unexplored multistarrer genre, the narration is totally new to Tamil cinema and finally, the message it delivers is strong.
    Life changing event. Superb
    Finally Love forever in this movie. Great point

    பதிலளிநீக்கு