புதன், ஜூலை 13

திரையுலக அந்தரங்க அனுபவங்களை வாக்குமூலமாக சொல்லப்போகிறார் நடிகை சோனியா


திரையுலக அந்தரங்க அனுபவங்களை வாக்குமூலமாக சொல்லப்போகிறார் நடிகை சோனியா அகர்வால்.ஆனால் இது சோனியாவின் நிஜ திரையுலக அனுபவங்கள் அல்ல ஒரு நடிகையின் வாக்குமூலம் என்ற படத்தில்தான் அப்படியொரு வாக்குமூலம் கொடுக்கப் போகிறார்.

செல்வராகவனுடனான விவாகரத்துக்கு பிறகு சோர்ந்து போகாமல், சினிமா வாய்ப்பு வேட்டையில் இறங்கியிருக்கும் சோனியாவுக்கு, அடுத்தடுத்து கைமேல் பலன் கிடைத்துக் கொண்டே இருக்கிறது. வானம் படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருந்த சோனியா, மேலும் சில படங்களில் கமிட் ஆகியிருக்கிறார். 

அவற்றில் மிக முக்கியமான படம் ஒரு நடிகையின் வாக்குமூலம். கேசவன் தயாரிப்பில், டைரக்டர் ராஜ் கிருஷ்ணா இயக்கும் இப்படத்தில் முன்னணி நடிகை ஒருவரின் திரையுலக அனுபவம்தான் கதையாக்கப்பட்டுள்ளதாம். 

அந்த நடிகை கேரக்டரில் நடிக்கப் போகிறவர் சோனியா அகர்வால். எந்த நடிகையின் வாக்குமூலம் என்பதை சஸ்பென்சாக வைத்திருக்கும் படக்குழுவினர், இந்த படம் ரீலிஸ் ஆனால் திரையுலகையே ஒரு உலுக்கு உலுக்கும் என்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக