புதன், ஜூலை 13

நிலவில் அமெரிக்கர்கள்

சந்திரனில் கடந்த 40 ஆண்டுகளாக அமெரிக்க தேசியக் கொடிகள் கம்பீரமாகப் பறந்து கொண்டிருக்கின்றன.

முதன் முதலாக நீல் ஆம்ஸ்டிராங் மற்றும் பஸ் ஆல்டரின் ஆகியோர் நிலவில் காலடி எடுத்து வைத்தபோது அமெரிக்க தேசியக் கொடியை நட்டுவிட்டு வந்தனர்.

அமெரிக்கர்கள் இதுவரை 6 முறை நிலவுக்கு சென்று வந்துள்ளனர். ஒவ்வொரு முறையும் தங்கள் சாதனையின் நினைவாக அமெரி்க்க தேசியக் கொடியை நிலவில் நட்டு பறக்கவிட்டு வந்தனர்.

இவர்கள் அனைவரும் நட்ட கொடிகள் இன்னும் நிலவில் பறந்து கொண்டிருக்கிறதா என்று கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் லைப்ரேரியன் ஆன்னி பிளாடாபுக்கு சந்தேகம் எழுந்தது.

இது குறித்து அவர் நடத்திய ஆய்வில் நிலவில் நடப்பட்ட 6 கொடிகளில் 4 கொடிகள் மட்டும் தான் இன்னும் பறந்து கொண்டிருக்கின்றன என்று தெரியவந்துள்ளது.
மீதமுள்ள 2 கொடிகள் நிலவில் இருந்து பூமிக்குத் திரும்ப விண்வெளி வீரர்கள் பயன்படுத்திய விண்கல ராக்கெட்களில் இருந்து வெளியான வெப்ப வாயுக்களால் சேதமடைந்திருக்கலாம் என்று தெரிய வந்ததுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக