புதன், ஜூலை 13

'விமான நிலையத்தில் என் ரசிகர்களை நடந்தே போய் பார்க்க ஆசைப்படுகிறேன்

சென்னை: விமான நிலையத்தில் கூடும் என் ரசிகர்கள் ஒவ்வொருவரையும் நடந்தே போய் நேரில் சந்திக்க ஆசைப்படுகிறேன், என்று கூறியுள்ளார் ரஜினி. இன்று மாலை 6 மணிக்கு சிங்கப்பூரிலிருந்து புறப்படும் ரஜினி 10.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் வந்திறங்குகிறார்.

அவரை வரவேற்க பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் விமானநிலையத்தில் கூடுகிறார்கள். விமான நிலையத்தில் ரஜினி வரும்போது கூட்டம் நெருக்கியடிக்குமே என்ற கவலை லதா ரஜினி மற்றும் குடும்பத்தினருக்கு ஏற்பட்டுள்ளது.

எனவே விமான நிலைய வாசலிலிருந்து காரில் அவரை உட்காரவைத்து ரசிகர்களை நோக்கி கையசைத்தபடி போக ஏற்பாடு செய்யத் திட்டமிட்டனர் லதா ரஜினி உள்ளிட்டோர். ஆனால் இந்த ஏற்பாட்டுக்கு மறுத்த ரஜினி, "இன்று நான் புதுப்பிறவி எடுத்து வந்திருப்பதே ரசிகர்களால்தான். என்னைப் பார்க்கத்தான் அவர்கள் வருகிறார்கள்.

எனவே நான் நடந்தே போய் அவர்களைப் பார்க்கப் போகிறேன். எனக்கு ஒன்றும் ஆகாது," என்று கூறியுள்ளார். ரஜினியின் இந்த புதிய முடிவைத் தொடர்ந்து, ரசிகர்கள் எங்கே கூட வேண்டும், எப்படி வரவேற்பு அளிக்க வேண்டும் என்பது குறித்து மன்ற நிர்வாகிகள் அனைவருக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

மாலை 8 மணியிலிருந்து...

ரஜினியை வரவேற்க சென்னை உள்பட அனைத்து மாவட்ட ரசிகர்களும் மாலை 8 மணியிலிருந்து ரசிகர்கள் விமான நிலையத்தில் கூட ஆரம்பிக்கின்றனர். இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக