புதன், ஆகஸ்ட் 3

என் மகன் கெளதமை மணிரத்னம் படத்தில் மட்டுமே நாயகனாக அறிமுகப்படுத்த சம்மதிப்பேன்இளைய தளபதி விஜய் உடன் இணைந்து டைரக்டர் மணிரத்னம் இயக்குவதாக இருந்த 'பொன்னியின் செல்வன்' படத்திட்டம் கைவிட பட்டதாக கொலிவுட்டில் கூறுகிறார்கள்.
தற்போது மணிரத்னம்,சுவாரசியமான பொழுது போக்கு படம் பண்ண தயாராகி வருவதாக தகவல் பரவியுள்ளது.நடிகர் கார்த்திக்கு தனது 'மௌன ராகம்' படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் புது அத்யாயத்தை துவக்கி வைத்தார் டைரக்டர் மணிரத்னம்.
இதை இன்னும் மறவாத கார்த்திக் தன் மகன் கெளதமை நாயகனாக படத்தில் அறிமுகப்படுத்துவார் மணிரத்னம் என காத்திருக்கிறார்.


திரையுலகை சேர்ந்தவர்கள், கார்த்திக் மகன் கெளதமை நாயகனாக படத்தில் அறிமுகப்படுத்த கேட்டதற்கு கார்த்திக் மறுத்துவிட்டாராம்.


'என் மகன் கெளதமை மணிரத்னம் படத்தில் மட்டுமே நாயகனாக அறிமுகப்படுத்த சம்மதிப்பேன்' என்று ஆணித்தரமாக கூறினாராம் அவர்.
மணிரத்னம் எடுக்க உள்ள 'காஸ்மோபாலிடன் சிட்டி காதல்' படத்தில் கெளதம் நாயகனாக நடிப்பார். இசைப்புயல் ரகுமான், கேமிரா மேன் பி.சி.ஸ்ரீராம் போன்ற கலைஞர்கள் இதில் பணிபுரிவார்கள் என எதிர்பார்க்கிறது கோலிவுட் பட வட்டாரம்.

2 கருத்துகள்: