வெள்ளி, ஆகஸ்ட் 5

முகமூடியில் பூஜா ஹெக்டே

யு டிவி தயாரிக்க, மிஷ்கின் இயக்கும் புதிய படமான ”முகமூடி”யில் அமலா பால் நடிக்கவில்லை. அவருக்குப் பதில் பூஜா ஹெக்டே நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஜீவா நாயகனாக நடிக்கும் புதிய படம் ”முகமூடி”.
இந்தப் படத்தில் நாயகியாக அமலா பால் நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் இப்போது அவர் நடிக்கவில்லை. அவருக்கு பதில் பூஜா ஹெக்டே நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். 

மும்பை பாந்திராவைச் சேர்ந்தவர் பூஜா. சமீபத்தில் நடந்த மிஸ் யுனிவர்ஸ் இந்தியா அழகிப் போட்டியில் இரண்டாவது இடம் பெற்றவர் பூஜா. 

”முகமூடி” இவரது முதல் படம் என்றாலும், இந்தப் படத்துக்காக இவருக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் ரூ.18 லட்சம் என்கிறார்கள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக