வெள்ளி, ஆகஸ்ட் 5

பிடிவாத குணத்தை என்னால் மாற்ற முடியவில்லைஎன் பிடிவாதத்தால் பல விஷயங்களை இழந்திருக்கிறேன்; இருந்தாலும் பிடிவாத குணத்தை என்னால் மாற்ற முடியவில்லை என்று நடிகை நயன்தாரா வேதனை தெரிவித்துள்ளார். சிம்புவுடன் காதல் முறிவைத் தொடர்ந்து, நடிகர் பிரபுதேவாவுடன் காதல் வயப்பட்டிருக்கும் நடிகை நயன்தாரா, விரைவில் பிரபுதேவாவை திருமணம் செய்யவுள்ளார்.

இந்த திருமணத்துக்கு இடையூறாக இருந்த காதல் மனைவி ரமலத்தை, நடிகர் பிரபுதேவா சமீபத்தில் விவாகரத்து செய்தார். திருமண கனவுகளுடன் சமீபத்தில் கேரள பத்திரிகை ஒன்றிற்கு மனம்திறந்த பேட்டியளித்துள்ளார் நயன்தாரா. அதில் தன்னுடைய பிடிவாத குணம் பற்றி கூறி வேதனைப்பட்டிருக்கிறார்.

நயன்தாரா பேட்டியில், "பிடிவாதம்தான் என் கெட்ட குணம். ஒரு முடிவு எடுத்து விட்டால், எந்த இழப்பு வந்தாலும் அதை செய்து பார்க்க ஆரம்பித்து விடுவேன். இந்த குணத்தால் பல விஷயங்களை இழந்திருக்கிறேன். இருந்தாலும் என்னால் மாற முடியவில்லை; என்னை மாற்றிக் கொள்ளவும் முடியவில்லை, என்று வேதனையுடன் தனது நெகட்டிவ் பக்கங்களை கூறியிருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக