சனி, நவம்பர் 5

25 கிலோ உடல் எடையைக் குறைத்துள்ளார் ஷாம்


ஹாலிவுட் படங்களைப் போல தமிழ் படங்களில் படப்பிடிப்பு ஒத்திகை நடத்துவது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என ஷாம் கூறியுள்ளார்.

ஹாலிவுட்டில் நடிகர்கள் நடிப்பதற்கு முன்னதாக ஒரு தடவை ஒத்திகை பார்ப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள்.
தற்பொழுது தமிழ் சினிமாவில் கமல்ஹாஸன் மீண்டும் தனது படங்களுக்கு ஒத்திகைப் பார்ப்பதை வழக்கமாக ஆரம்பித்துள்ளார்.


அந்த வரிசையில் இப்போது நாயகன் ஷாம் மற்றும் இயக்குநர் வி.இசட் துரை ஆகியோர் சேர்ந்துள்ளனர். தங்களின் புதிய படமான '6' (உண்மையில் இந்தப் படத்துக்குத் தலைப்பே கிடையாது. 6 மெழுகுவர்த்திகளை குறிக்கும் வகையில் அமைந்துள்ள ஒரு six Candles Symbol தான் இந்தப் படத்துக்கு தலைப்பு) ஆகும்.


இப்படத்திற்கான படப்பிடிப்பை சென்னையில் நடத்தினர். படத்தின் பெரும்பகுதி படமாக்கப்பட்டுவிட்ட நிலையில், நகரியில் நடக்கவிருக்கும் முக்கியமான படப்பிடிப்புக்காகத்தான் இந்த 10 நாட்கள் ஒத்திகை நடந்தது.
இதில் நாயகன் ஷாம், நாயகி பூனம் கவுர், படத்தில் முக்கிய வேடத்தில் வரும் குழந்தை உள்பட அனைவரும் பங்கேற்று ஒத்திகை பார்த்தனர். நாயகன் ஷாம் கூறுகையில் கதாநாயகன் மற்றும் நாயகிக்கிடையிலான காட்சிகள் மட்டுமென்றால் பரவாயில்லை.


ஆனால் இவர்களுக்கிடையில் ஒரு சிறு குழந்தையுடன் பயணப்பட வேண்டிய படம் என்பதால் அந்த குழந்தையின் உணர்வுகளை சரியாகக் காட்ட வேண்டும். உள்வாங்கி நாங்களும் நடிக்க வேண்டும். இதில் சின்ன தவறு நேர்ந்தாலும் படம் சரியான பலனைத் தராமல் போகும் அபாயம் உள்ளது.


எனவே வெளிநாடுகளில் செய்வது போல, படப்பிடிப்புக்கு முந்தைய ஒத்திகைக்கான படப்பிடிப்பு ஒன்றை இந்தப் படத்துக்காக நடத்தினோம். உண்மையிலேயே மிகவும் பயனுள்ளதாக இருந்தது.


இனி நேரடியாக படப்பிடிப்பிற்கு போகும்போது ஒளிப்பதிவாளரின் வேலை மட்டும்தான் மீதமிருக்கும். நாம் செய்ய வேண்டியது என்ன என்பதில் தெளிவாக இருந்தால் குறைந்தபட்ச நேரத்தில் குறித்த திகதிக்குள் வேலைகள் முடிந்து விடும் என்றார் ஷாம்.


படத்தின் ஒத்திகை அனுபவம் பற்றி நாயகி பூனம் கவுர் கூறுகையில், ஒத்திகை பார்த்துவிட்டு படப்பிடிப்புக்குப் போவது இது தான் எனக்கு முதல் அனுபவம். உண்மையிலேயே இது வேறு உலகத்தைக் காட்டுவதாக இருந்தது. படப்பிடிப்பில் எப்படிப்பட்ட கஷ்டமான காட்சியாக இருந்தாலும் எந்த தயக்கமும் இல்லாமல் நடிக்கும் நம்பிக்கை வந்திருக்கிறது என்றார்.
இந்தியாவின் முக்கிய நகரங்களில் எல்லாம் படமாகும் “6” படத்தை வி. இஸட் துரை இயக்குகிறார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். வசனத்தை ஜெயமோகன் எழுதுகிறார்.


6 வருடம், 6 மாதம், 6 வாரம், 6 நாட்கள், 6 மணி நேரம், 6 நிமிடம், 6 நொடிகளில் நிகழும் சம்பவங்களை மையப்படுத்தி இந்தப் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.


இப்படத்துக்காக 25 கிலோ உடல் எடையைக் குறைத்துள்ளார் ஷாம். அதுவும் ஒரு தனி மருத்துவக் குழுவின் உதவியுடன் படிப்படியாக தன் எடையைக் குறைத்துள்ளார் என்கிறது பட வட்டாரம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக