சனி, நவம்பர் 5

உண்மைகள் மறைக்க முடியாதவை



சினிமாக்களில் வரும் காட்சிகளை பார்த்து அதிர்ச்சி - இந்தியா
 

திரைப் படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளை அறவே ஒழிக்கும் வகையில் புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இனி புகைப்பிடிக்கும் காட்சி வந்தால், அதைத் தொடர்ந்து 30 செகன்டுகளுக்கு புகைப்பழக்கத்துக்கு எதிரான வசனங்களும் வைக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதனை நிறைவேற்றாத படங்களுக்கு சென்சார் அனுமதி கிடைக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சினிமாக்களில் வரும் புகைப்பிடிக்கும் காட்சிகளை பார்த்து, இளைஞர்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு ஆளாவதாக பரவலான குற்றச்சாட்டு உள்ளது.

தங்களது அபிமான கதாநாயகன் சிகரெட் பிடிக்கும் ஸ்டைலைப் பார்த்து, அதுபோலவே, தாங்களும் செய்ய ரசிகர்கள் விரும்புகின்றனர். இதனால், சினிமாக்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகள் இல்லாமல் பார்த்துக் கொள்கிறார்.

ஆனால், திரைப்பட துறையினர் இந்த கோரிக்கையை ஏற்கக்கூடாது என்று வலியுறுத்தினர். இந்நிலையில், சமீப காலமாக இந்தியில் வெளியான படங்களை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஹீரோக்கள் மட்டுமின்றி ஹீரோயின்களும், அவர்களின் தோழிகளும் கூட புகைப்பிடிப்பது போன்ற ஏராளமான காட்சிகள் இடம் பெற்று இருந்தன. இதையடுத்து, சினிமாக்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளுக்கு கட்டுப்பாடுகள் கொண்டு வர தீர்மானிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து, இந்த துறை தொடர்பான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு அரசு கெஜட்டில் கடந்த மாதம் 27-ந்தேதி வெளியிடப்பட்டது. 

புதிய சட்ட திருத்தத்தில் கூறப்பட்டுள்ள புதிய நிபந்தனைகள் வருமாறு:

* சினிமாக்களில் நடிகர்கள் புகைப்பிடிக்கும் காட்சிகளை தவிர்க்கவேண்டும்.

* ஒரு வேளை புகைப்பிடிக்கும் காட்சிகள் வைக்கப்பட்டால், சினிமா முடிவில் புகைப் பிடிப்பதால் ஏற்படும் உடல் நலக்கேடு தொடர்பான 30 வினாடி வசனம் இடம்பெற வேண்டும்.

* மேலும், புகைப்பிடிக்கும் காட்சிகள் வரும்போது, ரசிகர்களுக்கு நன்கு தெரியும் வகையில் 'புகைப் பிடிப்பது உடல் நலத்துக்கு கேடு விளை விக்கும்' என்ற வாசகம் திரையின் அடிப்பகுதியில் காட்டப்பட வேண்டும்.

* இந்த வாசகம் இடம் பெறுகிறதா? விதிமுறைகள் ஒழுங்காக கடைப்பிடிக்கப் படுகின்றனவா? என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் கண்காணிக்கவேண்டும். தணிக்கைத் துறையும் இதில் கவனமாக இருக்க வேண்டும். இந்த விதிகளைப் பின்பற்றாத படங்களுக்கு சான்றிதழ் தரக்கூடாது.

* சம்பந்தப்பட்ட சினிமா 'டி.வி.'க்களில் ஒளிபரப்பு செய்யப்படும்போது, படம் ஒளிபரப்பாகும் முன்பும், பின்பும், ஒளிபரப்பாகும் போதும் இரண்டு முறை புகைப்பிடிப்பதற்கு எதிரான அந்த வாசகம் காட்டப்பட வேண்டும்.

* குறைந்தது 20 நிமிடங்கள் அந்த வாசகம் நீடிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக