வெள்ளி, நவம்பர் 4

முருகதாசுக்கும் அஞ்சலிக்கும் என்ன???????எங்கேயும் எப்போதும் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், மீண்டும் தனக்கு முருகதாஸ் படத்தில் வாய்ப்பு கிடைத்தால் சந்தோஷமாக நடிப்பேன் என்றார் அஞ்சலி (இதையேதான் அரவான் இசை வெளியீட்டின்போது வசந்த பாலனுக்கும் சொன்னார்!)

எங்கேயும் எப்போதும் வெற்றி பெற்ற சந்தோஷத்தில் உடனடியாக இன்னும் ஒரு புதிய படத்தைத் தயாரிக்கிறார் ஏ ஆர் முருகதாஸ். இந்தப் படத்தையும் பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.

7ஆம் அறிவு படத்தில் பணியாற்றிய உதவி இயக்குநர் ஒருவர்தான் இந்தப் படத்தை இயக்குகிறார். கதையைக் கேட்ட முருகதாஸ், தன் உதவியாளரிடம் அடுத்து கேட்டது, படப்பிடிப்பை எப்போது ஆரம்பிக்கிறாய் என்றுதானாம்.

ஹீரோ யார் என்பது இன்னும் முடிவாகாவிட்டாலும், ஹீரோயின் மட்டும் அஞ்சலிதான் என்பதை முடிவு செய்துவிட்டாராம் முருகதாஸ். பெரிய வாய்ப்பு கிடைத்த மகிழ்ச்சியில் திளைக்கிறார் அஞ்சலி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக