ஞாயிறு, பிப்ரவரி 27

மறுபடியும் திரையில் இணையும் சூர்யா ஜோதிகா .....
நடித்துக்கொண்டிருக்கும் போதும் சரி நிறுத்தி விட்ட பிறகும் சரி ஜோதிகாவை யாராலும் மறக்க முடியாது .திருமணம் ஆனதில் இருந்து நடிப்பதை மொத்தமாக நிறுத்தி விட்டார் ஜோதிகா.


அதற்க்குப்பிறகு அவர்களது இரண்டு குழந்தைகளை வளர்ப்பதில் கவனம் செலுத்தி வருகிறார் .

இதற்க்கிடையில் ஓரிரு முறைகள் மட்டும் ஒன்றிரண்டு விளம்பரங்களில் நடித்துள்ளார் .கடைசியாக இந்த ஜோடி ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்தின் ஒரு தொலைக்காட்சி விளம்பரத்திற்க்காக ஒன்றாக நடித்தார்கள் .நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்த ஜோடி மீண்டும் ஒரு முறை ஒன்றாக தோன்ற  உள்ளனர் .ஆனால் இந்த முறையும் ஒரு விளம்பரதிற்க்குத்தான் .

சூர்யா இதை பற்றி  கூறுகையில் ..

மிகுந்த வற்புறுத்தலுக்கு பிறகு தான் அவரை நடிக்க ஒப்புக்கொள்ள வைக்க முடிந்தது .ஒரு ரசிகனாக நானும் ஜோதிகாவை திரையில் காண முடியாமல் தவிக்கிறேன் .நான் அவரை மீண்டும் நடிப்பதை எற்றுக்கொள்ளுமாறு கூறி கொண்டுதான் இருக்கிறேன் .அனால் அவர் அதை ஏற்றுக்கொள்ள தயார் ஆகவில்லை .காரணம் குழந்தைகளை கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளதால் வேறு எதிலும் கவனம் செலுத்துவதில்லை என்ற முடிவில் உள்ளார்.

கோயம்புத்தூரில் ஒரு நெருங்கிய உறவினர் தயாரிப்பாளர் ஜனவேல்ராஜா  கல்யாணத்தில் பங்கேற்க்க வேண்டி இருந்ததால் ,என்னுடைய காதலுக்கு காதலர் தினத்தன்று எந்த அன்பளிப்பும் கொடுக்க முடியவில்லை மிஸ் பண்ணிவிட்டேன் என்பது வருத்தமாக உள்ளது என்றார் ..
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக