புதன், ஏப்ரல் 6

முடிந்தது உலக கோப்பை... அணிவகுக்கும் திரைப்படங்கள் ...


உலக கோப்பை  கிரிக்கட்போட்டி முடிவடைந்து விட்டது. . இதைத் தொடர்ந்து இந்த கிரிக்கெட் திருவிழாவுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய தமிழ்ப் படங்கள் வரிசையாக வெளியாகின்றன.


அடுத்த வாரத்தில் மட்டும் 10 புதிய, பெரிய படங்கள் வெளியாக உள்ளன.


கடந்த பிப்ரவரியில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கியது. அன்று முதல் திரைப்படங்கள் சீந்துவாரின்றி போயின. வசூல் அடியோடு பாதிக்கப்பட்டது.

இன்றுடன் உலகக் கோப்பை கிரிக்கெட் முடிவதால் 10 புதுப்படங்கள் ரிலீசுக்கு தயாராகின்றன. 


இதில் தனுஷ், ஹன்சிகா மோத்வானி ஜோடியாக நடிக்க மாப்பிள்ளை படம் வருகிற ஏப்ரல் 8-ந் தேதி ரிலீசாகிறது. இது 1989-ல் வெளியான ரஜினியின் மாப்பிள்ளை படத்தின் ரீமேக் ஆகும். 


கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள கோ படமும், முதல்வர் கருணாநிதி வசனத்தில் பிரசாந்த் நடித்துள்ள பொன்னர்-சங்கர் படமும் ஏப்ரல் 15-ல் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சுசீந்திரன் இயக்கிய அழகர்சாமியின் குதிரை மற்றும் கவுதம் மேனன் தயாரிப்பில் உருவாகியுள்ள கண்டேன் போன்ற படங்கள் வருகிற 27-ந் தேதி திரைக்கு வருகின்றன.

பிரபுதேவா இயக்கத்தில் ஜெயம் ரவி - ஹன்சிகா மோத்வானி ஜோடியாக நடிக்க எங்கேயும் காதல் படம் வருகிற 29-ந் தேதியும், சிம்பு, பரத், அனுஷ்கா ஆகியோர் நடித்துள்ள வானம் படம் மே 6-ந் தேதியும் ரிலீசாகின்றன. 

180 என்ற பெயரில் சத்யம் சினிமாஸ் தயாரித்துள்ள படம் மே 13-ல் வருகிறது. பாலா இயக்கத்தில் ஆர்யா, விஷால் இணைந்து நடித்துள்ள அவன் இவன் படம் மே 20-ம் தேதியும், விக்ரம் நடிக்க விஜய் இயக்கியுள்ள தெய்வ திருமகன் படம் மே 27-ம் தேதியும் திரைக்கு வருகிறது.

2 கருத்துகள்:

 1. What about IPL matches from April 8 to May 28th?????

  பதிலளிநீக்கு
 2. ஆம் சகோதரி காலங்கள் கை கூடவில்லை போலும். சொந்த வேலைகள் சில இருக்கின்றன..
  செய்திகளில் சிறு தாமதங்கள் ஏற்படும் ...
  தடங்கலுக்கு வருந்துகிறேன் ...
  முடிந்தவரை முயற்சி செய்கிறேன் ...

  பதிலளிநீக்கு