புதன், மார்ச் 16

காலிறுதிக்குள் நுழைவோம்


தென் ஆபிரிக்காவுடனான அடுத்த போட்டியில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைவோமெனப் பங்களாதேஷ் கப்டன் ஷாகிப் அல்ஹசன் தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷ் நெதர்லாந்திடையே நடந்த போட்டியில் பங்களாதேஷ் வெற்றி பெற்றது.

இது குறித்து பங்களாதேஷ் கப்டன் ஷாகிப் அல்ஹசன் கூறியதாவது:

இந்த வெற்றி எங்களுக்கு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. எங்கள் வெற்றி இனியும் தொடரும். எனவே அடுத்த போட்டியிலும் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைவோம். ஓட்ட வீத அடிப்படையில் இல்லாமல் அடுத்த போட்டியில் வெற்றி பெற்றே காலிறுதிக்குள் நுழைய விரும்புகிறோம்.

தென் ஆபிரிக்காவையும் வெல்லக்கூடிய சக்தி எங்களிடம் உள்ளது. ஒருவேளை நாங்கள் அவர்களிடம் தோற்றாலும் கூட கடும் நெருக்கடி கொடுப்போம். எந்த சூழ்நிலையிலும் எங்களால் சிறப்பாக ஆட முடியும். அந்த போட்டிக்காக கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

2 கருத்துகள்: