புதன், மார்ச் 16

மறுபடியும் வெற்றி

பெங்களூரில் நடைபெற்று  முடிந்த  உலகக் கோப்பை கிரிக்கெட் ஏ-பிரிவு ஆட்டத்தில் ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக கனடா 211 ரன்களை எடுத்துள்ளது. பிரெட் லீ 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.


துவக்க வீரரான 19 வயது இளம் வீரர் ஹிரால் படேல் பாண்டிங்கின் முகத்தில் கோபக்களை ஏற்படுத்தினார். பிரெட் லீ, ஷான் டெய்ட், மிட்செல் ஜான்சன் என்று அனைத்து பந்து வீச்சாளர்களையும் அதிரடி அடித்து அதிரச் செய்த படேல் 5 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அவர் ஆட்டமிழக்கும்போது 11.2 ஓவர்களில் கனடா 82 ரன்களை எடுத்திருந்தது. பின்னால் வந்த வீரர்களில் சர்காரி 34 ரன்களையும் கேப்டன் பகாய் 39 ரன்களையும் எடுத்து டெய்ட் பந்தில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 

கடைசியில் வாதம் 18 ரன்களையும் பைத்வான் 17 ரன்களையும் எடுக்க கனடா 211 ரன்களுக்கு 46-வது ஓவரில் சுருண்டது .

டெய்ட் துவக்கத்தில் அடி வாங்கி பிறகு 8 ஓவர்களில் 34 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

பிரெட் லீ 46 ரன்களில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, கிரேஜா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். வாட்சன், ஜான்சன் தலா 1 விக்கெட்டைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பு எடுத்தாடிய ஆஸ்ட்ரேலியா அணி 34.5 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 91 பந்துகள் மீதம் இருக்கும் நிலையில் 212 ஓட்டங்களை எடுத்து தமது தொடர்வெற்றியை தக்கவைத்து கொண்டனர் .
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக