செவ்வாய், மார்ச் 29

இறுதி போட்டிக்கு நுழைந்தது இலங்கை


இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று கொழும்பு பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் இலங்கை அணி ஐந்து விக்கெட்டுக்களால் அபார வெற்றி பெற்றுள்ளது.  இதன் மூலம் உலக கோப்பை போட்டிகளில் மீண்டும் இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 48.5 பந்துகளில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 217 ஓட்டங்களை எடுத்தது. நியூசிலாந்தின் சார்பில் ஸ்டைரிஷ் 57 ஓட்டங்களை எடுத்ததர். பந்துவீச்சில் மலிங்க, மெண்டிஸ் தலா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 47.5 பந்துகளில் ஐந்து விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து குறித்த இலக்கை கடந்தது. இலங்கை அணியின் சார்பில் தில்ஷான் 73 ஓட்டங்களையும், குமார் சங்ககார 54 ஓட்டங்களையும் எடுத்து வெற்றிக்கு வழிகோரினர்.

நாளை புதன்கிழமை இந்தியா- பாகிஸ்த்தான் அணிகளுக்கு இடையில் இரண்டாவது அரையிறுதி போட்டி நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் அணி இலங்கையுடன் இறுதிப்போட்டியில் மோதுகிறது.











1 கருத்து:

  1. தமிழில் அருமையான பதிவு. வாழ்த்துகள். மென்மேலும் உங்கள் பணி தொடர வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு