வியாழன், மார்ச் 17

கலையார்வத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை..நடிகர்களுக்கு நடிப்பைத் தொடர திருமணம் ஒரு தடையாக இருப்பதில்லை. ஆனால் நடிகைககள்தான் திருமணத்திற்குப் பிறகு தொடர்ந்து நடிப்பதில் ஏகப்பட்ட இடியாப்பச் சிக்கல்கள். 

பெரும்பாலானவர்கள் மீண்டும் நடிக்கு வந்து விடுகிறார்கள். கலையார்வத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதே இவர்களிடம் இருக்கும் ரெடிமேட் பதில்.

இந்த சினிமா நியதிக்கு உட்படாத நடிகைகள் யாராவது இருக்கிறார்களா என்றால்... ம்ஹூம் ரொம்பக் கம்மி(ராதாவும் நடிக்கத் தயார் என்று ஸ்டேட்மெண்ட் விட்டுவிட்டார்)! அந்த வகையில் ஜோதிகாவும் இப்போது நடிக்க வந்து விட்டார்.

எக்காரணம் கொண்டும் ஜோதிகா இனி நடிக்க மாட்டார் என திருமண வரவேற்பின்போது அறிவித்தார் அவரது மாமனார் சிவகுமார். ஆனால் இதோ, நான்காண்டுகள் கழிந்த நிலையில் இப்போது ஜோதிகா நடிக்கவுள்ளதாக கணவர் சூர்யாவே அறிவித்துள்ளார்.

சமீபத்தில் ஒரு விளம்பரப் படத்தில் சூர்யாவும், ஜோதிகாவும் கணவன்-மனைவியாக ஜோடியாக நடித்துள்ளனர். ஒரு காபி விளம்பரம் அது. இது ஒரு ட்ரையல்தான் போலிருக்கிறது.

இப்போது, பெரிய வாய்ப்பிருந்தால் சொல்லுங்கள், கணவன் - மனைவியாக முழுப்படத்திலும் நடித்துக் கொடுக்கிறோம் என்று அறிவித்துள்ளனர் சூர்யாவும் ஜோதிகாவும்!

2 கருத்துகள்: