திங்கள், மே 7

விஜய் சிகரெட் பிடிக்கும் காட்சி நீக்கம்
சென்னை:போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டதையடுத்து துப்பாக்கி படத்திலிருந்து விஜய் சிகரெட் பிடிக்கும் காட்சி நீக்கப்பட்டுள்ளது. அக்காட்சி இடம்பெறும் போஸ்டரையும் ஒட்டப்போவதில்லை என இயக்குனர் முருகதாஸ் கூறினார். விஜய் சிகரெட் பிடிப்பதுபோல் துப்பாக்கி படத்தின் போஸ்டர் பல இடங்களில் ஒட்டப்பட்டது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இது குறித்து தொண்டு நிறுவனம் ஒன்று, போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் புகார் அளித்தது. 

இது பற்றி பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறுகையில், ‘விஜய் சிகரெட் பிடிப்பதுபோல் துப்பாக்கி படத்துக்கு போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. இது விளம்பரத்துக்காக மட்டுமே எடுக்கப்பட்ட புகைப்படம். அதுபோல் காட்சி படத்தில் இடம்பெறவில்லை. ஒரு சிறு காட்சியில் மட்டும் விஜய் சிகரெட் பிடிப்பதுபோல் இடம்பெற்றது. அதை கூட படத்திலிருந்து நீக்கிவிட்டோம். இனிமேல் சிகரெட் பிடிப்பதுபோன்ற எந்த காட்சியும் போஸ்டரில் பயன்படுத்தமாட்டோம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக