வெள்ளி, ஏப்ரல் 1

சித்தார்த்துடன் காதலா?

மனைவியை விவாகரத்து செய்த நடிகர் சித்தார்த்துடன் ஸ்ருதி ஹாஸன் காதல் வயப்பட்டிருப்பதாக தெலுங்குப் படவுலகில் பேசப்படுகிறது.

இந்த விவகாரத்தை ஸ்ருதி மறுக்கவும் இல்லை, ஒப்புக் கொள்ளவும் இல்லை. கமல் மகள் ஸ்ருதி தமிழில் 7-ஆம் அறிவு படத்தில் சூர்யா ஜோடியாக நடித்து வருகிறார். தெலுங்கிலும் நடிக்கிறார்.

அங்கு சித்தார்த்துடன் தொடர்ந்து இரண்டாவது படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர்கள் இருவரும் நடித்த முதல் படம் சரியாகப் போகாத நிலையிலும், ஸ்ருதியை இரண்டாவது படத்திலும் சித்தார்த் ஜோடியாக்கியிருப்பது அவர்களின் நெருக்கத்தைக் காட்டுவதாகக் கூறுகிறார்கள்.

இதனால் இருவரும் காதலிப்பதாக வதந்திகள் கிளம்பின. மனைவியை விவாகரத்து செய்துவிட்ட சித்தார்த், இப்போது ஸ்ருதியை தீவிரமாகக் காதலிப்பதாக தெலுங்குப் படவுலகில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. இருவரும் ஒன்றாக சுற்றுவது குறித்த செய்திகளும் தெலுங்குப் பத்திரிகைகளில் வெளியாகி வருகின்றன.
இது பற்றி ஸ்ருதியிடம் கேட்ட போது, "நானும் சித்தார்த்தும் 'அனகனாக ஓ தீருடு' என்ற படத்தில் இணைந்து நடித்தோம். அந்தப் படம் நன்றாக இருந்தது. இதனால் மீண்டும் இன்னொரு படத்தில் சேர்ந்து நடிக்கிறோம்.

கிசுகிசுக்களின் பின்னணி இதுதான் என்று நினைக்கிறேன். சித்தார்த் எனது நெருங்கிய நண்பர். இதுபோன்ற கிசுகிசுக்களை நான் பொருட்படுத்தவில்லை. மேலும் நான் மும்பையில் செட்டிலாகிவிட்டதாக பேசுகின்றனர்.

அங்கு எனக்கு நிறைய படங்கள் வருவதால் தங்க வேண்டி உள்ளது. முழுமையாக அங்கேயே தங்கிவிடவில்லை. மாதத்தில் 20 நாட்கள் சென்னையில்தான் இருக்கிறேன்.

இந்தியில் லக் படம் நன்றாக ஓடவில்லை. ஆனாலும் அங்குள்ள ரசிகர்கள் என்னை ஒரு நடிகையாக ஏற்றுக் கொண்டுவிட்டனர். அது பெரிய விஷயம்", என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக