சனி, அக்டோபர் 15

ஏன் இப்படி செய்தார் நயன்தாராபிரபுதேவா-நயன்தாரா காதல் தொடருமா? இடறுமா? இதுதான் இப்போதைய அதி முக்கியமான கேள்வியாகியிருக்கிறது தமிழ், தெலுங்கு, கேரளா ஆகிய மூன்று பிரதேசங்களிலும்! முணுக்கென்று மூச்சு விட்டால் கூட மோப்பம் பிடித்துவிடும் மீடியா, இந்த விவகாரத்தை லேசாக கீறியிருப்பதால்தான் இத்தனை பரபரப்பும்.

நிஜத்தில் நடந்தது என்ன?

கடந்த சில தினங்களுக்கு முன் கேரளாவிலிருக்கும் நயன்தாரா வீட்டுக்கு போனாராம் பிரபுதேவா. அவரை உள்ளேயே விடாமல் வாசலிலேயே சுமார் இரண்டு மணி நேரம் காக்க வைத்துவிட்டாராம் நயன்தாரா. உட்புறம் பூட்டப்பட்ட கதவுக்கு முன் நின்று கொண்டு நயன்தாராவின் செல்போனை பலமுறை தொடர்பு கொண்டும் அதை எடுக்கவே இல்லையாம் அவர். இந்த சம்பவம் வெளியே கசிந்ததால்தான் இவர்களின் திருமணம் நடக்குமா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார்கள் மலையாள பத்திரிகையாளர்கள்.

ஏன் இப்படி செய்தார் நயன்தாரா ?

வெடி படம் முடிந்து ரிலீஸ் ஆனதும் திருமண தேதியை அறிவிக்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்திருந்தாராம் மாஸ்டர். அதற்காகவே காத்திருந்த நயன், மறுநாளில் இருந்தே இவரை நச்சரிக்க ஆரம்பித்துவிட்டார். இதற்கிடையில் தனது குழந்தைகள் மிகவும் அன்பாக இருக்கும் பிரபுதேவா, இந்த காலாண்டு விடுமுறையில் அவர்களை அழைத்துக் கொண்டு வெளிநாட்டுக்கு பறந்துவிட்டாராம். அதுவும் நயன்தாராவுக்கு தெரியாமல்.
போனில் தொடர்பு கொண்ட நயன்தாரா, எங்கேயிருக்கீங்க என்று கேட்க, நான் மும்பையிலிருக்கிறேன் என்று சமாளித்தாராம் மாஸ்டர். நீங்க அங்கேயே இருங்க. நான் வர்றேன் என்று உடனடியாக மும்பைக்கு கிளம்பியிருக்கிறார் நயன். வந்தால் தான் வெளிநாட்டில் இருக்கிற விஷயம் தெரிந்துவிடுமே என்று பதறிய மாஸ்டர் ஏதேதோ சொல்லி சமாளிக்க, விடாமல் நச்சரித்திருக்கிறார் நயன்தாரா.

வேறு வழியில்லாத பிரபுதேவா குழந்தைகளை அழைத்துக் கொண்டு போன வேகத்தில் திரும்பியிருக்கிறார். அவர்களை சென்னையில் விட்டுவிட்டு மீண்டும் கேரளாவுக்கு ஓடிய போதுதான் இப்படி ஒரு அவமானம்.
தன்னிடம் பொய் சொல்லும் ஒருவர் எப்படி தன்னை வைத்து நிம்மதியாக குடும்பம் நடத்துவார் என்ற அதிருப்தி வந்திருக்கிறதாம் நயன்தாராவுக்கு. இதையடுத்து இருவரது காதல் தேசத்திலும் புயலும் சூறாவளியும் அடிக்க தொடங்கியிருக்கிறதாம்.

அம்மி மிதித்து அருந்ததியை பார்ப்பார்கள் என்று நினைத்தால், அம்மிக்கல்லை துக்கி காதல் தேவதையின் தலையில் போடுவார்கள் போலிருக்கிறது.

2 கருத்துகள்:

  1. அடடே ரொம்ப பீல் பண்ண வச்சிட்டீங்களே?போங்க சார்,போயி புள்ள,குட்டிங்கள படிக்க வைக்கிற வழியைப் பாருங்க!

    பதிலளிநீக்கு
  2. ஐயையோ, கல்யாணம் நடக்காதா? ரொம்ப பேரு செத்துப் போயிடுவாங்களே?

    பதிலளிநீக்கு