வியாழன், மார்ச் 17

அதிர்ச்சியில் அசின்அப்படியே அதிர்ந்து போய் கிடக்கிறாராம் நடிகை அசின்... லட்ச லட்சமாகக் கொட்டும் அழகு சாதனப் பொருள் விளம்பர வாய்ப்பு தன் கை நழுவி த்ரிஷாவுக்குப் போனால் அதிர்ச்சியாகாதா என்ன! 

திரிஷா வாய்ப்புகளை அசினும் அசின் வாய்ப்புகளை திரிஷாவும் தட்டிப் பறிப்பது புதிதல்ல. தமிழில் ஆரம்பித்து இப்போது இந்தியிலும் இந்த போட்டி தொடர்கிறது. இப்போது விளம்பர படங்களில் நடிப்பதிலும் அந்த போட்டி பலமாகியுள்ளது.

பிரபலமான அழகு சாதனப்பொருள் விளம்பரமொன்றில் நீண்ட நாட்களாக அசின் நடித்து வந்தார். இதற்காக அவர் பெரும் தொகையை சம்பளமாக வாங்கினார். தற்போது அந்த வாய்ப்பை திரிஷா தட்டி பறித்துள்ளார். கடந்த வாரம் இதற்கான படப்பிடிப்பு நடந்தது.

இப்போது அந்த அழகுசாதனப் பொருளுக்குப் பக்கத்தில் த்ரிஷா சிரிப்பது போல விளம்பரங்களும் வெளியாகிவிட்டன. அசினுக்கு இது அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

கடந்த இலங்கை போய் வந்தபிறகு, தொடர்ந்து பல வாய்ப்புகளை இழந்து வருகிறார் அசின். அதில் முக்கியமானது ரஜினிக்கு ஜோடியாக ராணாவில் நடிக்க வந்த வாய்ப்பு.

கே எஸ் ரவிக்குமார் அசினை ஒப்பந்தம் செய்ய பரிந்துரைத்தும், ரஜினி வேண்டாம் என்று கூறிவிட்டாராம். இப்போது முக்கிய விளம்பர வாய்ப்பும் பறிபோயுள்ளது. ஆனால் இதற்குக் காரணம் அசினின் இலங்கைப் பயணமா அல்லது வேறா என்று தெரியவில்லை.

2 கருத்துகள்:

  1. நாட்டுக்கு ரொம்ப அவசியமான விஷயத்த பதிவா போட்டு எங்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்திய உங்களுக்கு.எங்களின் நன்றிகள்.

    பதிலளிநீக்கு