செவ்வாய், மே 10

பாராட்டப்பட வேண்டியவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்


இந்திய கிரிக்கட் அணியின் கப்டனாக இருந்து இந்தியாவிட்க்கே உலக கோப்பையை வென்று தந்த உங்களுக்கு எனது பாராட்டுக்களையும்  வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.இந்திய இளையர்களின் வழிகாட்டியாக உள்ள நீங்கள் அவர்கள் மீது மதுப்பழக்க த்தையும் திணிக்காமல் மறைமுகமாக மதுபான விளம்பரங்களில் இருந்து விலகுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று பகிரங்கமாக கடிதம் அனுப்பி இருந்தார் .

இது அன்புமணி ராமதாசின் பாராட்டுக்குரிய செயலுக்கான ஆரம்பம் .அவர் தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டதாவது  குடிப்பழக்கத்தால் இளையர்கள் தான் அதிகளவில் பாதிக்கபடுகின்றனர்.அதன்காரணமாக பல பாதிப்புக்கள் ஏற்ப்படுவதாக தோனிக்கு அனுப்பி இருந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

மதுபான   விளம்பரங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதால் மறைமுக சோடா தண்ணீர்  இசைத்தட்டு என இந்தமாதிரியாக இல்லாத பொருட்களின் பெயரில் மதுபான விளம்பரங்கள்  செய்யப்படுகின்றன .

இத்தகைய மறைமுக மதுபான விளம்பரங்களில் நடிக்க உங்களது முன்னோடி சச்சின் டென்டுல்க்கர் மறுத்துவிட்டார் .கடந்த 2010 ஆம் ஆண்டு மறைமுக மதுபான விளம்பரங்களில் நடிக்க சச்சின் தேண்டுல்க்கரிட்க்கு சுமார் இருபது கோடி கொடுத்து மதுபான நிறுவனங்கள் தயாராக விருந்த போதும் அவர் அதனை ஏற்க்க மறுத்து விட்டார் .

உங்களது படத்துடன் கூடிய மதுபான விளம்பரங்கள் இளம் தலைமுறையினர் மத்தியில் ஒரு மதுப்பழக்கத்தை தீண்டும் செய்யலாக அமைந்துள்ளது .இளையர்களின் எதிர்கால நலனை மனதில் வைத்து நீங்கள் மதுபான நிலைய சதியை அறுத்து எறிய வேண்டும்.  மதுபான விளம்பரங்களில் இருந்து நீங்கள் வெளியேற வேண்டும் .இளம் தலைமுறையின் நலன் கருதி நீங்கள் இதிலிருந்து வெளியேறுவீர்கள்  என நம்புகிறோம் . இந்தவகையில் அவரது கடிதம் அமைந்திருந்தது.

கடிதம் பெற்ற தோனியும் இளையர்களின் எதிர்கால நலன் கருதி விளம்பரங்களில் இருந்து விலகி மேலும்  அவரது விளம்பரப்படங்கள் தற்ப்போது அகற்றப்பட்டு விட்டனவாம் .

எனவே  இங்கு  எமது  பாராட்டுக்குரியவர் ராமதாஸ் ஐயா அவர்கள் . இன்றைய இளையர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு எல்லா இளையர்களுக்கும்  முன்னுதாரணமாய்  வலம் வந்த தோனியின் செயல் வரவேட்ப்புக்குரியது அல்ல என்ற உண்மையை உலகுக்கு வெளிபடுத்தி உள்ளார் .

கிரிக்கட் உலகில் அனைவரின் பாராட்டு மழையிலும் சிறுகுழந்தை கூட தோணி என்று சொல்லும் அளவுக்கு முகுந்த பிரபலம் பெட்டரு உள்ள இந்தமாதிரியான பெருமைக்குரிய பிரபலங்கள் சிலவேளைகளில் செய்யும் தவறான இஜ் செயற்ப்பாடுகள் இளையர்  மத்தியில் ஆளமாய் பதிந்து விடுகின்றன .அவர்களின் பந்து வீச்சு அவர்களின் துடுப்பாட்டம் என கிரிக்கட் உலகை ரசிக்கும் இளம் சமுதாயம் அவர்களினால் தவறாக சென்று விட கூடாதென்பதை நன்றாக விளங்கி கொண்ட அன்புமணி ராமதாஸ் தனது நல்லெண்ணத்தை திறம்பட முடித்துள்ளார் .அவரின் செயற்ப்பாடு இன்றைய இளையர்கள் மத்தியில் பெரும் வரவேட்ப்பையும் பாராடையும் பெற்றுள்ளன என்றால் அது பொய் அல்ல ..

உங்களால் முடியாதது எதுவும் இல்லை ...தங்கள் சேவை மிகுந்த வரவேற்ப்புக்கு உரிய பெரிய விஷயம் .இதே போல் சட்று திரை உலகம் பக்கமும் சென்று வாருங்கள் ஐயா.

வானம் ரிலீசாம் ....திரையரங்கு நிறைந்த கூட்டம்  இன்னும் ஓயவில்லை .. ஆனால் அங்கே பரத் தோன்றும்  பெரும்பாலான அனைத்து காட்சிகளையும் .............இனியும் திரை படங்களில்  தோன்றப்போகும்  இந்தமாதிரியான புகைத்தல் மற்றும் மதுபானம் தொடர்பான காட்சிகளையும் அகற்றி விடுங்களேன் ...

2 கருத்துகள்:

 1. மிக நன்றாக சொன்னீர்கள்.

  இந்த பதிவில் கூடுதல் தகவல்கள் கிடைக்கும்:

  http://alcoholfreecricket.blogspot.com/

  பதிலளிநீக்கு
 2. மிகவும் நன்றி சகோதரம் ...இந்தமாதிரியான பெரும் புள்ளிகளின் நன்மையுடன் கூடிய செயல்களால் மட்டுமே நாட்டில் அவசியம் அற்றதை அகற்றி நல்லவற்றை செய்ய முடியும் ..தங்கள் மேலதிக தகவலுக்கு மிக்க நன்றி .. ...

  மேலும் உங்கள் தகவல்களை எதிர்பார்க்கிறேன் ..

  பதிலளிநீக்கு