புதன், மே 11

நான் தான் ஒதுங்கி போய்விட்டேனே..


சிம்புவே விரும்பாவிட்டாலும் வந்து சேரும் போலிருக்கிறது வம்பு.
ஒரே ஒரு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஓராயிரம் சிக்கல்களை கிளப்பிவிட்டு போனார் அவர். செய்தியாளர்களின் கேள்விக்கு போகிற போக்கில் பதில் சொன்னார். 

நயன்தாரா கல்யாணம் நடந்தால் பார்க்கலாம் என்பது தான் அந்த பதில். திரும்புகிற இடமெல்லாம் இதுதான் செய்தி. ஒருவேளை இருவருக்குள்ளும் பிரச்சினை வந்துவிட்டதோ, இந்த கல்யாணம் நடக்காமல் போய்விடுமோ என்றெல்லாம் ஆயிரம் சந்தேகங்கள்.

ஆனால் அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்கிற மாதிரி ஒரு தகவல் கசிந்திருக்கிறது இன்று. சென்னையில் இருக்கும் தனக்கு நெருக்கமாக சில தோழிகளை குறுந்தகவல்கள் மூலம் தொடர்பு கொண்ட நயன்தாரா, "நான் தான் ஒதுங்கி போய்விட்டேனே அப்புறமும் ஏன் சீண்டனும்" என்று கவலைப்பட்டாராம்.

நயன்தாரா விடயத்தில் இப்படி உசுப்பேற்றிவிட்டு போன சிம்பு, தனது ரசிகர்கள் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்ட விடயம் குறித்து பேசும் போது கூட, "அப்படியா, எனக்கொன்றும் தெரியாதே" என்று கூறிவிட்டார். சிம்புவுக்காக பொலிஸ் நிலையம் வரைக்கும் போன ரசிகர்களுக்கு இந்த பதில் பெரும் கவலையை வரவழைத்திருப்பதாக கேள்வி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக