ஞாயிறு, மார்ச் 20

இந்திய அணி 80 ரன்களால் அபார வெற்றி


இந்திய - மேற்கிந்திய அணிகளுக்கு இடையே இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் இடம்பெற்றஇறுதி முதல் சுற்றுப்போட்டியில் இந்திய அணி 80 ரன்களால் அபார வெற்றி பெற்றுள்ளது.

அதிரடி ஆட்டநாயகன் ஷேவாக் விளையாடாத இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட நுழைந்த இந்திய அணி 49.1 பந்துகளில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 268 ரன்களை எடுத்தது.

யுவராஜ் சிங் 113 ஓட்டங்களையும், கோலி அதிரடியாக 59 ரன்களையும் எடுத்தனர். பந்துவீச்சில் ராம்போல் 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

பதிலுக்கு களமிறங்கிய மேற்கிந்திய அணி சிறப்பான ஆரம்ப துடுப்பாட்டத்தை தொடங்கிய போதும் இந்திய சுழற்பந்துவீச்சாளர்களின் ஸ்பின்னிங்கில் சிக்கி சின்னாபின்னமாகி போனது. அதிகபட்சமாக ஸ்மித் 81 ரன்களை எடுத்தார். இறுதியில் மே.இந்திய தீவுகள் அணி 42 ஓவர்கள் முடிவில் 188 ரன்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து.

பந்துவீச்சில் சஹீர் கான் 3 விக்கெட்டுக்களையும், யுவராஜ் சிங் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். போட்டி நாயகனாக துடுப்பாட்டத்தில் மாத்திரமல்லாது பந்துவீச்சிலும் கலக்கிய யுவராஜ் சிங் தெரிவானார்.

இப்போட்டியில் வென்றதன் மூலம் வரும் வியாழக்கிழமை காலிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் மோதவிருக்கிறது இந்தியா. இம்முறை உலக கோப்பையை வெல்லலாம் என பெரிதும் எதிர்பார்க்கப்படும் இவ்விரு அணிகளும் காலிறுதியிலேயே மோதும்சந்தர்ப்பம் ஏற்பட்டது துரதிஷ்ட்டவசமானது. எனினும் பாகிஸ்த்தானுடன் தோல்வி அடைந்து தலைகுனிந்துள்ள ஆஸியை, காலிறுதியுடன் வெளியேற்றிவிட இந்தியாவுக்கு ஒரு நல்ல வாய்ப்பு .







1 கருத்து: