வெள்ளி, மார்ச் 18

நான் உயரமாக இருப்பதால்தான் நடிக்க வாய்ப்பு வந்ததுவிஜய்யுடன் “வேட்டைக்காரன்” சூர்யாவுடன் “சிங்கம்” படங்களில் நடித்துள்ளார். நடிகையான அனுபவம் பற்றி சொல்கிறார். நான் யோகா ஆசிரியை.
நிறைய பேருக்கு கற்று கொடுக்க வேண்டும் என்று தான் இதை படித்தேன். நான் நடத்திய யோகா வகுப்புக்கு தெலுங்கு இயக்குனர் ஒருவர் யோகா கற்றுக்கொள்ள வந்தார்.


அவர் என்னை இப்படி நடிகையாக்கி விட்டார். நடிகை பூமிகாவின் கணவராகி விட்ட பரத் தாகூர்தான் எனக்கு யோகா கற்றுக் கொடுத்த குரு.
நகைகள் அணிய எனக்கு பிடிக்காது, சேலை, மர்டர்ன் டிரெஸ் என எந்த மாதிரி உடை அணிந்தாலும் நகைகள் போட்டுக்க மாட்டேன். நான் உயரமாக இருப்பதால்தான் நடிக்க வாய்ப்பு வந்தது.

ஆனாலும் இன்னும் கொஞ்சம் குள்ளமாக இருந்து இருக்கலாம் என்று கவலை படுவது உண்டு. தனிமை எனக்கு பிடிக்கும். வீட்டில் அறைக்குள் ஒருநாள் முழுக்க தனியாக இருந்தாலும் போராடிக்காது.

தினமும் இரவு 8 மணிக்கு முன்பு சாப்பிட்டு விடுவேன் எனது உடம்பு கச்சிதமாக இருப்பதற்கு அதுதான் காரணம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக