செவ்வாய், மார்ச் 22

பாண்டிங் நல்ல பார்மில இல்லையாம்...


இந்தியா கால்இறுதியில் ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் வருகிற 24-ந்தேதி அகமதாபாத்தில் நடக்கிறது.

வெஸ்ட்இண்டீஸ் அணி `பி' பிரிவில் 4-வது இடத்தை பிடித்தது. அந்த அணி கால் இறுதியில் `ஏ' பிரிவில் முதலிடத்தை பிடித்து பாகிஸ்தானுடன் மோதுகிறது.
ஆட்டநாயகன் விருது பெற்ற யுவராஜ்சிங் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கால்இறுதியில் ஆஸ்திரேலியாவை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். அந்த அணி பாகிஸ்தானிடம் தோற்று இருக்கிறது. ஆஸ்திரேலிய அணி சிறந்தது தான். தொடர்ந்து 3 முறை உலக கோப்பையை வென்றுள்ளது. ஆனால் அப்போது இருந்த மெக்ராத், வார்னே, கில்கிறிஸ்ட் ஆகியோர் இப்போது இல்லை.
பாண்டிங் தற்போது நல்ல பார்மில் இல்லை. ஆஸ்திரேலியாவின் பலவீனத்தை நாங்கள் சரியாக பயன்படுத்திக்கொள்வோம். அந்த அணியை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. `ஷாட்பிட்ச்' பந்தை இந்திய வீரர்கள் சிறப்பாக ஆடக்கூடியவர்கள். இதனால் தான் டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்திலும், ஒரு நாள் போட்டியில் 2-வது இடத்தில் உள்ளோம்.
வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான போட்டி தொடங்குவதற்கு முன்பு எங்களது ஒரே குறிக்கோள் வெற்றி பெற வேண்டும் என்பது தான். கால் இறுதி பற்றி சிந்திக்கவில்லை. வெஸ்ட்இண்டீஸ் ஒரு கட்டத்தில் நல்ல நிலையில் இருந்தது.
ஜாகீர்கான் 2 முக்கிய விக்கெட்டை கைப்பற்றியது தான் ஆட்டத்தின் திருப்புமுனை. அஸ்வின், நான் ஹர்பஜன் ஆகியோரும் சிறப்பாக பந்து வீசினோம். நான் சதம் அடிக்க வேண்டும் என்று விரும்பினேன். அதற்கு ஏற்றவாறு ஆட்டம் அமைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக