ஞாயிறு, மார்ச் 20

நேர்காணலா ?



எந்த இடத்துக்கு நேர்காணல்  போகிறீர்களோ, அந்த நிறுவனத்தைப் பற்றி ஓரளவாவது தெரிந்து கொண்டு செல்லுங்கள்.
நேர்காணல்  நடக்குமிடத்துக்குப் பத்து நிமிடம் முன்னதாகப் போனாலும் தப்பில்லை. ஒரு நிமிடம் தாமதமாகப் போனாலும், அது உங்களுக்குக் கரும்புள்ளிதான்.
உங்களது டிரெஸ் ரொம்பவும் முக்கியம். பளபளா டிரெஸ், மூச்சை அடைக்கும் சென்ட், கண்ணைப் பறிக்கும் மேக்கப் போன்றவற்றைத் தவிர்த்துவிட்டு, எளிமையாக, அதே சமயம் அழகாகச் செல்லுங்கள்.
படபடப்பு இருக்கத்தான் செய்யும். ஆனாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளக் கூடாது. சிரித்த முகத்துடன் காட்சியளியுங்கள்.
நேர்காணலின் போது உங்கள் முன் இருக்கிற அத்தனை பேருக்கும் வணக்கம் சொல்லிவிட்டு, அவர்கள் சொன்ன பிறகே இருக்கையில் அமர வேண்டும். 
பேசும் போது எல்லாரையும் பார்த்துப் பேச வேண்டியது முக்கியம். நேர்காணலின் போது கேட்கப்படுகிற கேள்விக்கு முழுமையான, தெளிவான பதில் தர வேண்டியது அவசியம்.

1 கருத்து: