வியாழன், மார்ச் 17

நியூசிலாந்து அணியை குறைத்து மதிப்பிடக் கூடாது



வெட்டோரி, மில்ஸ் இல்லாத போதிலும் நியூசிலாந்து அணியை குறைத்து மதிப்பிடக் கூடாது என இலங்கை அணியின் துணைக் கப்டன் ஜெயவர்தனா தெரிவித்துள்ளார்.
பத்தாவது உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் நாளை மும்பையில் நடக்கவுள்ள ஏ பிரிவு லீக் போட்டியில் இலங்கை, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் காயம் காரணமாக நியூசிலாந்து கப்டன் டேனியல் வெட்டோரி, வேகப்பந்து வீச்சாளர் மில்ஸ் விளையாட வாய்ப்பு இல்லை.
இதுகுறித்து இலங்கை அணியின் ஜெயவர்தனா கூறியதாவது: நியூசிலாந்து அணியில் கப்டன் வெட்டோரி, வேகப்பந்துவீச்சாளர் மில்ஸ் இல்லாதது எங்களுக்கு சாதகமாக அமையலாம். இவர்கள் இருவரும் அனுபவ பவுலர்கள் என்பதால் நியூசிலாந்து அணிக்கு பின்னடைவு இருக்க வாய்ப்பு உள்ளது.
அதே வேளையில் நியூசிலாந்து அணியை குறைத்து மதிப்பிடக் கூடாது. கடந்த போட்டியில் வெட்டோரி இல்லாத நிலையில் ரோஸ் டெய்லர் அணியை சிறப்பாக வழிநடத்து வெற்றி தேடித் தந்தார்.
நியூசிலாந்து அணியில் உள்ள மற்ற வீரர்களும் நல்ல பார்மில் இருப்பதால் மிகுந்த கவனமுடன் விளையாட வேண்டும். இவ்வாறு ஜெயவர்தனா கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக