புதன், மார்ச் 2

சிவராத்திரி விரத நியதிகள்


சிவராத்திரி தினத்தின் முதல் நாளில் ஒரு வேளை உணவு உண்ணுதல் வேண்டும்.


சிவராத்திரிதினத்தில் உபவாசம் இருந்து இரவு நான்கு சாமமும் நித்திரையின்றி சிவபூஜை செய்ய வேண்டும்.

சிவபூஜை செய்ய இயலாதவர் நித்திரையின்றி நான்கு சாமமும் சிவாலய தரிசனம் செய்தல் வேண்டும் ,விபூதி தரித்து உருத்திராக்கம் அணிந்து பஞ்சாட்ச்சரம்  செபித்தல்,சிவராத்திரி புராணம் படித்தல் .சிவன் தொடர்பான புராண கதைகளை கேட்டல் போன்றவற்றில் ஈடுபடவேண்டும்

லிங்கோ ட்ப வ காலத்தில்சிவனை விசேடமாக வழிபட வேண்டும் .அப்படி எனில் திருமால் பிரமன் அறியாதபடி சோதியாக நின்ற பரம்பொருள் குளிர்ந்து லிங்க வடிவில் காட்சி தந்த காலத்தை குறிப்பது .இரவில் பதின்னாங்கு நாழிகைக்கு மேல் (11.30 -12.15) இரு நாழிகை ( 1 நாழிகை- 24நிமிடங்கள்)பரம்பொருள் லிங்கத்தில் தோன்றியருளினார் அதனால் அக்காலத்தில் சிவபூஜை செய்து வழிபட வேண்டும் .

சிவராத்திரியின்மறுநாள் அதிகாலையில் நீராடி பாரணை செய்தலும் சிவனடியார்களுக்கு மகேசுவர போசை செய்தலும்வேண்டும்.

சிவராத்திரி விரதத்தை தொடர்ந்து பன்னிரண்டு அல்லது இருபத்திநான்கு வருடங்கள் அனுட்டித்தல் வேண்டும் .சிவராத்திரி விரத நாளில் உபவாசம் உத்தமம்.நீரேனும் பாலேனும் அருந்துதல் மத்திமம்.பழம் உண்ணுதல் அதமம்.சிவராத்திரி தினத்தில் நான்கு ஜாமம் நித்திரை ஒழிக்க இயலாதவர் லிங்க்கோட்பவ காலம் நீங்கும் வரையிலும் நித்திரை ஒழிக்க வேண்டும் . 

4 கருத்துகள்:

  1. தகவலுக்கு என் நன்றி. பகிர்வுக்கு பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  2. அடடா விரத நாளில கூட புளொக்கிற்கு ஓய்வில்லியா ?

    பதிலளிநீக்கு
  3. ஆம்,தங்கள் கருத்து இக்கு நன்றி ..
    உங்கள் கருத்துக்களை வரவேற்க்கிறேன் சகோதரம் கருணாகரசு அவர்களே ..

    பதிலளிநீக்கு
  4. விரதநாள் தானே எமக்கு ஒரு ஓய்வு நாள் ..நேரம் கிடைத்தது சகோதரா..மிகவும் நன்றி ..

    பதிலளிநீக்கு