புதன், மே 4

காதலில் கவிழாதவர் யார்??உறுமி படத்தில் நடித்து கொண்டே 'எங்கேயும் காதல்' படத்தை எடுத்துள்ளார் இயக்குனர் பிரபு தேவா.

அடுத்து பாலிவுட் படம், விஷால் நடிக்கும் படம் என்று பிரபு தேவா பரபரப்பாக வேலையில் இறங்கப்போகிறார்.

மனதை வருடும் இசை, பாடல்களுடன் எடுக்கப்பட்ட காதல் படம் தான் 'எங்கேயும் காதல்'. ஜெயம் ரவி, ஹன்சிகா இருவர்கள் தான் படத்தின் முக்கியமான கதாபாத்திரங்கள்.இந்த காதல் கதையில் பாரிஸ் நகரமும் இணைகிறது. படத்தில் இடையே வில்லன்களும், கொமெடியன்களும் வரமாட்டார்கள். தேவையில்லாத திருப்பங்கள் இப்படத்தில் இருக்காது.

காதலுடன் மெல்லிய நகைச்சுவை படம் முழுக்க இழையோடும். வன்முறை படத்திலிருந்து காதல் படத்தின் பாதை மாறியது ஏன் என்று கேட்கிறார்கள்.
பிரபஞ்சம் முழுக்க காதல் நிரம்பி இருக்கு. காதலில் கவிழாதவர்கள் யார்?. காதல் படத்தை எடுக்க தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் முழு சுதந்திரம் கொடுத்துள்ளார்.

அதனால்தான் இதயத்தின் அடி ஆழத்திலிருந்து இப்படி ஒரு படைப்பை எடுக்க முடிந்தது. ஜெயம் ரவி, ஹன்சிகா ஒத்துமையான காதல் ஜோடியாக நடித்துள்ளார்கள்.இருவரிடையே காதல் ரசாயனம் விளையாடியுள்ளது. இளசுகளின் ரசனைக்கு ஏற்றார் போல இந்த படத்தை எடுத்துள்ளோம்.

கமெராமேன் நீரவ் ஷா, பாரீஸ் நகரை அழகாக காட்டியிருக்கார். ஹாரிஸ் இசை ரசிகர்களின் மனதில் ரீங்காரமிடும் என்று இயக்குனர் பிரபு தேவா கூறியிருக்கிறாராம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக