ஞாயிறு, மே 22

விரைவில்.......



சிறந்த இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான்

விஜய் டி.வி. சார்பில் ஆண்டுதோறும் பிரமாண்டமான முறையில், கலை நிகழ்ச்சிகளுடன் இசை விருதுகள் வழங்கப்படுகிறது. அதேபோல் இந்தாண்டும் 2010ம் ஆண்டுக்கான இசை விருதுகள் வழங்கப்பட்டன. அதில் சிறந்த இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் தேர்வு செய்யப்பட்டார். 


சிறந்த பாடகருக்கான விருது, விண்ணைத்தாண்டி வருவாயா" படத்தில் ஹோசானா... பாடலுக்காக, விஜய் பிரகாஷ்க்கு வழங்கப்பட்டது. 



சிறந்த பாடகிக்கான விருது, விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் மன்னிப்பாயா... பாடலுக்காக, ஸ்ரேயா ஹோசலுக்கும், ஆயிரத்தில் ஒருவன் படத்தில் மாலை நேரம்... பாடலுக்காக, ஆண்ட்ரியாவுக்கும் வழங்கப்பட்டது. 



சிறந்த பாடலாசிரியருக்கான விருது, நா.முத்துக்குமாருக்கு வழங்கப்பட்டது. 



நடிகர் பாடிய பாடலுக்கான விருது,மன்மதன் அம்பு படத்தில், நீல வானம்... பாடலுக்காக கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டது. 



சிறந்த பாடல் கம்போசிங்கான விருது, பையா படத்தில் என் காதல் சொல்ல நேரமில்லை...பாடலுக்காக, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு வழங்கப்பட்டது. 



புதுமுக இசையமைப்பாளர் விருது, தமிழ்படம் படத்திற்காக கண்ணனுக்கு வழங்கப்பட்டது. 



சிறந்த சவுண்ட் மிக்சிங்கான விருது, கே.ஜெ.சிங், தீபக், ரசூல் பூக்குட்டி ஆகியோருக்கு வழங்கப்பட்டது. 



வாழ்நாள் சாதனையாளர் விருது, பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ்க்கு வழங்கப்பட்டது. 



இசை சக்கரவர்த்தி விருது, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு வழங்கப்பட்டது. 



இந்திய அளவில் இசையமைப்பில் சாதனை புரிந்ததற்காக, ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. 



2010ம் ஆண்டின் சிறந்த ஆல்பம் விருது, "விண்ணைத்தாண்டி வருவாயா" படத்திற்கு வழங்கப்பட்டது. 



பிரபல பின்னணி பாடகருக்கான விருது "ராவணன்" படத்தில் "உசுறே போகுது..." பாடலுக்காக, கார்த்திக்கு வழங்கப்பட்டது. 



சிறந்த டூயட் பாடலுக்கான விருது, "பையா" படத்தில் "அடடா மழை..." பாடலுக்கு கிடைத்தது. 



சிறந்த மெலோடிஸ் பாடலுக்கான விருது, பையா" படத்தில் துளி.. துளி... பாடலுக்கு கிடைத்தது.

1 கருத்து: