புதன், மே 4

தமன்னா காதல்!!!தமன்னா தமிழில் நடித்த அயன், படிக்காதவன், பையா, சிறுத்தை என பல படங்களில் நடித்து மார்கெட்டின் உச்சத்தை தொட்டுக் கொண்டிருந்த தமன்னா, திடீரென தமிழ் படங்களை விட்டு, தெலுங்கு படங்களில் கமிட் ஆனது, கோடம்பாக்கத்தில் பலரது புருவத்தை உயர்த்தியது.

இதன் பின்னணியில் ஒரு காதல் தோல்விக் கதை இருப்பதாக ஒரு தகவல் கசிந்துள்ளது.

விளம்பரம், சினிமா என போஸ்டர்களிலும் சேனல்களிலும் வந்து கொண்டே இருந்த தமன்னாவை காதல் காற்று வருட, பல நடிகையரைப் போல் தமன்னாவும் காதலில் விழுந்தாராம். விழுந்த இடம் வளமான இடம், எனவே நிம்மதியாக இருக்க.. காதலரின் வீட்டிலிருந்து வந்திருக்கிறது எதிர்ப்பு.

நாளாக நாளாக காதலைப் போலவே எதிர்ப்பும் அதிகமாகிக் கொண்டே போக, புதுப் படங்களில் கமிட் ஆகாமல் அமைதி காத்திருக்கிறார் தமன்னா. எப்படியும் அவர் நடிக்கும் படங்களில் எப்படியும் நாயகி நாம் தானே.. ஷூட்டிங்கில் பேசி சரி செய்து கொள்ளலாம் என நினைத்தவருக்கு, வந்தது அடுத்த அதிர்ச்சி.

புதுப்படங்களில் கமிட் ஆகாமல், ஏதேதோ காரணங்கள் சொல்லி அவர் தட்டிக் கழித்துக் கொண்டே போக, தமன்னா நடப்பதை புரிந்து கொண்டாராம். lதமிழில் நடித்தால், அவரை சந்திக்க நேரலாம், மனம் சங்கடப்படும் என்பதால் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறாராம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக