செவ்வாய், ஆகஸ்ட் 2

20 களிலேயே இறக்கும் பிரிட்டன் இளசுகள்


பிரித்தானியாவில் 20 களில் இள வயதினர் ஏராளமானோர் இறப்பதற்கு அதிக குடிப்பழக்கமே காரணம் என்று பிரிட்டனின் உயர் மருத்துவர் ஒருவர் எச்சரித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக பேராசிரியர் Ian Gilmore கருத்துத் தெரிவிக்கையில், 

இதற்கு முன்னர் தான் 30 வயதுக்கு முதல் குடியால் இறப்பவர்களைப் பார்த்ததில்லை. தற்போது 20 வயதுகளிலேயே அதிக குடிப் பழக்கத்தால் ஈரல் நோயினால் இறக்கிறார்கள்.

தற்சமயம் 3 லீற்றர் மதுபானம் 1 .99 ஸ்டேர்லிங் பவுண்களுக்கு மிகவும் குறைவான விலையில் விற்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.
இப்படியாக அதிக மது அருந்துவதற்கு வார இறுதி விடுமுறைகளும் ஒரு பிரதான காரணம். என்றார் அவர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக