சனி, அக்டோபர் 15

தம்பிக்கு குரல் கொடுக்கும் நடிகர் அஜித்


தெலுங்கு படமான பஞ்சா தமிழில் டப் செய்யப்படுகிறது அதில் நடிகா் பவன்குமாருக்கு அஜீத் குமார் குரல் கொடுக்கிறார்.
அஜீத்குமார் பில்லா 2 படத்தில் படு பிசியாக இருக்கிறார் அதே போன்று இயக்குனர் விஷ்ணுவர்தன் சிரஞ்சீவி தம்பியை வைத்து பஞ்சா என்னும் படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்.


அந்த படத்தில் தீராத விளையாட்டுப் பிள்ளையில் நடித்த நடிகை சாரா ஜேன் மற்றும் மாடல் அழகி அஞ்சலி லாவனியாவும் நடிக்கின்றனர்.
இந்த படத்தை தமிழில் டப் செய்கிறார் இயக்குநா் விஷ்ணுவர்தன்.
நடிகர் பவன் கல்யாணுக்கு தமிழில் குரல் கொடுக்க யாரை அணுகலாம் என்று யோசித்த அவருக்கு சட்டென்று நினைவுக்கு வந்தது நம்ம தல தான்.
விஷ்ணுவர்தன் பில்லா 2 படத்தில் இருந்து விலகினாலும் அவருக்கும், அஜீத்துக்கும் இடையேயான நட்பு கெடவில்லை.

அதனால் அஜீத்குமாரை அணுகி பவன் கல்யாணுக்கு கொஞ்சம் குரல் கொடுங்களேன் என்று கேட்க அவரும் ஓகே சொல்லிவிட்டார் என்று கூறப்படுகிறது.

இந்த படம் டிசம்பர் மாதம் வெளியிடப்படுகிறது அஜீத் பில்லா-2 படத்தையும், விஷ்ணுவர்தன் பஞ்சா படத்தையும் முடித்த பிறகு இருவரும் சேர்ந்து பணிபுரியவுள்ளனர்.

1 கருத்து:

  1. தகவலுக்கு நன்றி............

    நன்றி,
    கண்ணன்
    http://www.tamilcomedyworld.com

    பதிலளிநீக்கு