திங்கள், ஜனவரி 9

தொடரும் கொலைவெறி...பாரட்டுக்கள் தனுஷுக்கு மட்டுமா ???

இனி உருவாகும் படங்களில் அரசின் கடுமையான விதிமுறைகள்

 திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளைக் கட்டுப்படுத்த, மத்திய அரசு பல புதிய விதிகளை அறிவித்தது. ஆனால், இந்த விதிகளை, திரைத்துறையினர் யாரும் மதிப்பதில்லை. அண்மையில் வெளிவந்த படங்களில் கூட, புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

திரைப்படங்களில், சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெறுவதற்கு தடை விதிக்கப்பட்டு, சட்டம் இயற்றப்பட்டது. இதற்கு, திரைத் துறையினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சட்டத்தை எதிர்த்து, கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

கடைப்பிடிப்பதில்லை : இதையடுத்து, இதுபோன்ற காட்சிகளைக் கட்டுப்படுத்த, சில திருத்தங்களுடன், புதிய விதிகள் அறிவிக்கப்பட்டு, நவம்பர் 14ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. ஆனால், திரைத் துறையினரும், சின்ன திரையினரும், இந்த விதிகளை மதிப்பதில்லை என, புகார் எழுந்துள்ளது. தணிக்கைத் துறையினரும், இந்த விதிகளை கடுமையாக அமல்படுத்துவதில்லை எனத் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாடு மைய அதிகாரிகள் கூறுகையில், "" ஜனவரியில் இருந்து வெளிவரும் படங்களில், இந்த விதிகளை கடுமையாக அமல்படுத்துவதாக, தணிக்கை அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர், என்றனர்.

உறுதிமொழி : இதுகுறித்து, திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான் கூறியதாவது: ஒரு படைப்பாளி என்ற வகையில், திரைப்படங்கள் இயல்பாக இருக்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், திரைத்துறை ஊடகம், மிகவும் சக்தி வாய்ந்தது. சமூகத்தை சீரழிக்கும் எந்த விஷயத்தையும் அதில் அனுமதிக்கக் கூடாது. சிகரெட், மது மட்டுமின்றி, குளிர்பானங்களை குடிப்பது போன்ற காட்சிகளையும், திரைப்படங்களில் தவிர்க்க வேண்டும். இயக்குனர்கள் மட்டுமல்லாது, நடிகர்களும், இத்தகைய உறுதிமொழியை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இயக்குனர் சிம்புதேவன் கூறும்போது, ""சினிமாவில், எத்தனையோ விஷயங்களில் சமரசம் செய்து கொள்வோம். எனவே, சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகள் கதையில் வந்தாலும், அதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்பதில், நான் முழுமையாக உடன்படுகிறேன், என்றார்.

புதிய விதிகள் : புகை பிடிக்கும் நடிகர், புகையிலைப் பொருட்களால் ஏற்படும் தீமைகளை விளக்கி சொல்லும் காட்சிகள், படத்தின் தொடக்கத்திலும், இடையிலும் இரண்டு முறை, தலா இருபது வினாடிகளுக்கு குறையாமல் இடம் பெற வேண்டும்.

புகைப்பிடிக்கும் காட்சியோ, புகையிலைப் பொருளோ இடம் பெறும் போது, புகையிலைக்கு எதிரான எச்சரிக்கை வாசகத்தை, வெள்ளை பின்னணியில், கறுப்பு எழுத்தில், அந்தந்த மொழியில் தெளிவாக ஓடவிட வேண்டும்.

திரைப்பட விளம்பரங்கள், சுவரொட்டிகள், பதாகைகள் போன்ற எதிலும், புகை பிடிக்கும் காட்சி, புகையிலைப் பொருள் சின்னம் எதுவும் இடம் பெறக் கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக