செவ்வாய், மார்ச் 8

இன்றைய மதிப்பு 65 பில்லியன் டாலர்!


பாஸ்டன்: முன்னணி சோஷியல் நெட்வொர்க் தளமான பேஸ்புக்கின் இன்றைய மதிப்பு 65 பில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.


இதனால் பேஸ்புக்கின் பங்குகளை வாங்க பெரும் நிறுவனங்கள் போட்டி போடுகின்றன. லேட்டஸ்ட் நிலவரப்படி, ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனம் 2.5 மில்லியன் பங்குகளை வாங்கத் திட்டமிட்டுள்ளது. இவற்றை பேஸ்புக்கின் முன்னாள் ஊழியர்களிடமிருந்து வாங்கத் திட்டமிட்டுள்ளது இந்த நிறுவனம். பங்குகளை விற்க முன்னாள் ஊழியர்கள் சம்மதித்துவிட்டாலும், பேஸ்புக் இன்னும் முறையாக அனுமதி தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.பேஸ்புக் நிறுவனத்தில் ஏற்கெனவே, கோல்ட்மென் சாஷ் நிறுவனம் 1.5 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது. அப்போது பேஸ்புக் மதிப்பு 50 பில்லியன் டாலராக இருந்தது. அடுத்த இரண்டே மாதங்களில் பேஸ்புக்கின் மதிப்பு 30 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது இன்டர்நெட் நிறுவனங்களை வியக்க வைத்துள்ளது.

2 கருத்துகள்: