செவ்வாய், மார்ச் 8

உலகக் கிண்ண போட்டியில் உலக சாதனைஅயர்லாந்துக்கு எதிராக அபாரமாகப் பந்துவீசிய இந்திய வீரர் யுவராஜ் சிங் 31 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் உலகக் கிண்ண வரலாற்றில் இடது கை சுழற்பந்து

வீச்சாளராக மிகச் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்து சாதனை படைத்துள்ளார்.
பெங்களூரில் நடந்த பி பிரிவு உலகக் கிண்ண லீக் போட்டியில் இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதின. கடந்த போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி அதிர்ச்சியளித்த அயர்லாந்துக்கு இம்முறை யுவராஜ் சிங் வேட்டு வைத்தார். சுழலில் மிரட்டிய இவர் வரிசையாக விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
பிரதான சுழற்பந்து வீச்சாளர்களான ஹர்பஜன், பியுஸ் சாவ்லா சொதப்பிய நிலையில் பகுதிநேர பந்துவீச்சாளரான யுவராஜ் பட்டையை கிளப்பினார். முதலில் ஆன்ட்ரூ வைட்டை வெளியேற்றினார். பின் ஆபத்தான கெவின் ஓ பிரையனை அவுட்டாக்கி திருப்புமுனை ஏற்படுத்தினார்.
கடந்த போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக 50 பந்துகளில் 100 ஓட்டங்கள் எடுத்த கெவின் உலகக் கிண்ண அரங்கில் அதிவேக சதமடித்தார். இம்முறை இவர் யுவராஜ் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெறும் 9 ஓட்டங்களுக்கு நடையை கட்ட இந்திய ரசிகர்கள் நிம்மதியடைந்தனர்.
அயர்லாந்து சார்பில் அதிகபட்சமாக 75 ஓட்டங்கள் எடுத்த அந்த அணியின் கப்டன் போர்ட்டர்பீல்டும் யுவராஜ் வலையில் சிக்கினார். தொடர்ந்து மூனி அதிரடி குசக்கை வெளியேற்றிய இவர் உலகக்கிண்ண அரங்கில் முதல் முறையாக 5 விக்கெட் கைப்பற்றினார்.
இம்முறை பாகிஸ்தான் கப்டன் அப்ரிடி அனைத்து போட்டிகளிலும் விக்கெட் வேட்டை நடத்தி வருகிறார். இதேபோல் யுவராஷýம் சாதித்து வருகிறார்.
5 விக்கெட்டில் 50 ஓட்ட சாதனை
நேற்று முன்தினம் பந்துவீச்சில் அசத்திய யுவராஜ் 5 விக்கெட் வீழ்த்தினார்.பின் துடுப்பாட்டத்திலும் கலக்கிய இவர் 50 ஓட்டங்கள் எடுத்தார். உலகக் கிண்ண வரலாற்றில் ஒரே போட்டியில் 5 விக்கெட் மற்றும் 50 ஓட்டங்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையும் படைத்தார்.
100 சிக்சர்
பியுஸ் சாவ்லா சுழலில் அயர்லாந்து கப்டன் போட்டர்பீல்ட் ஒரு இமாலய சிக்சர் அடித்தார்.இது இந்த உலகக்கிண்ண தொடரின் 100 ஆவது சிக்சராக அமைந்தது.இம்முறை முதல் சிக்சரை பங்களாதேஷ் வீரர் அப்துர் ரசாக் பந்தில் இந்தியாவின் செவாக் விளாசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக