செவ்வாய், மார்ச் 1

நான் வரைய மறந்த கடிதம் ..





அன்புள்ள அப்பாவிற்க்கு ,
எப்பிடி இருக்கிறிங்கள் .ஏன் என்றால் நீங்க நலமா இருந்தால் நானும் நலமா இருப்பேன் தானே .ஆமா எனக்கு ஏன் ஒரு கடிதம் கூட போடலை போன் கூட எடுக்கேலை ..ஏன் ????என்னை அப்பிடி மறக்கமாட்டிங்களே?? அப்பா .பத்து வருடம் ஆச்சு  உங்ககிட்ட  இருந்து எந்த தகவலும் இல்லை.நான் அம்மா கிட்ட கூட கேக்கவும் இல்லை.நீங்க எங்கை போயிட்டிங்க என்று??? ஆனால் அப்பா எப்பவும் என்கூட பேசாமல் இருக்க மாட்டிங்கள்  தானே .அந்த நம்பிக்கை இல்தான் அப்பா நான் இருக்கேன் ஏன் அப்பா நான் தானே உங்க செல்ல பொண்ணு.... அப்புறம் என் என்னை மட்டும் பார்க்க வாரிங்க இல்லை . ..
தினமும் தூங்க போற நேரம் எல்லாம் நீங்க வருவிங்களா மாட்டிங்களா என்று பார்த்தது பார்த்து எழுப்புவன் அப்பா...ஒரு வேளை எழும்பின நேரம் நீங்க வந்து போயிட்டிங்களா ??

ஏன் அப்பா ? நான் அப்பிடி என்ன செய்தன்..உங்களுக்கு பிடிக்காமல் ஏதும் செய்திருந்தால் எனக்கு சொல்லி இருக்கலாமே...அதுக்காக இப்பிடியா எனக்கு சொல்லாமல் போவிங்கள் ..எனக்கு ஒன்றுமே தெரியாதப்பா..அப்பிடி ஒரு தூக்கம் உலகமே தெரியாமல் நான் தூங்கிட்டு இருந்தேன்...ம்ம்ம்ம் யார்தான் அந்த நேரம் தூங்காமல் இருப்பாங்கள்...திடீரென்று யாரோ கூப்பிடாங்கள் பார்த்தால் அம்மா..........அப்பா இப்ப கூட  என்னாலை நீங்க என்கூட இருந்த அந்த கடைசி நிமிடத்துள்ளி அப்பிடியே .......தினம் ஒரு பொழுதும் என் உணர்வுகளை கொன்றுட்டே இருக்கு .

உங்களுக்கு ஒன்று தெரியுமா எல்லாரும் அப்பா அப்பா என்று பேசும் போது எல்லாம் நான் அந்த இடத்தில கூட  நிக்க  மாட்டேன்  அப்பா ..எனக்கு பிடிக்காது..எனக்கு பிடிக்காது .உங்களுக்கு ஒன்று தெரியுமா நான் இப்ப ஸ்கூல் இல எல்லாம் படிச்சு முடியுட்டேன்..உங்களுக்கு தெரியாது தானே.அண்ணா கூட படிச்சு முடிச்சிட்டார் ...உங்களுக்கு யாரும் சொன்னாங்களா நாங்க எப்பிடி இருக்கோம் என்று..ம்ம்ம்ம் இருக்கோம் அப்பா..

நீங்க இல்லாமா நான் எங்க அப்பா சந்தோசமா இருக்கிறது.வெளில தான் அப்பா சிரிப்பேன்..என்னதான் சிரித்தாலும் எனக்கு அப்பா இல்லையே என்ற கவலை என்னை உள்ளாலை கொன்றுட்டே இருக்கும் .என்னாலை நீங்க இல்லை என்ற ஒரு விடயத்தை நம்பவே முடியலை..ஏன் என்றால் இப்ப எல்லாம் எனக்கு அண்ணா இருக்கான் தானே.என்றாலும் அண்ணா பேசினால் எனக்கு சொல்லி அழ நீங்க இல்லை அப்பா.அண்ணா இக்கு அடிக்க நீங்க இல்லை அப்பா..இப்பவும் வீட்டை  வாறவங்க சொல்லுவாங்க.உனக்கு அண்ணா இக்கு அடிவாங்கி கொடுக்காமல் இருக்க முடியாதே என்று..ம்ம்ம்ம் இப்ப இப்ப கூட அதை சொல்லி பேசுவாங்க அப்பா.ஆனால் ....இதை சொல்லி அவங்களுக்கு பேச நீங்க இல்லை அப்பா எனக்கு.

ஏன் அப்பா கடைசியாக உங்க கூட நாங்க இருந்த அந்த நாட்கள் அப்ப கூட எப்பிடி அப்பா ஒன்றுமே இல்லதாமதிரி சிரிச்சிட்டே இருந்தீங்கள்.முருகன் கிட போய் இட்டு வந்தேன்.வீட்டை சொல்லிட்டு வாறன் என்று நீங்க சொன்னதாக  இப்பவும் மச்சாள் சொல்லுவாங்க அப்பா.ஏன் அப்பா முருகன் கிட்ட  பொய் சொல்லிட்டு என்னை விட்டு போகமுடியாமல் தானே திரும்பி வந்திங்கள் .அப்ப ஏன் அப்பா போனிங்க .இப்ப எல்லாம் உங்க கூட எடுத்த போட்டோவை தேடி தேடி சேர்க்கிறேன் அப்பா.உங்க ஆத்தாவ நான் இருந்தா காலத்தை நினைக்க நினைக்க கண் முட்ட தண்ணி வருத்தப்பா...ஆமா ஒருக்கா எனக்கு காய்ச்சல்  வந்ததே உங்களுக்கு ஜாபகம் இருக்கா.எனக்கு மருந்து  தாறதுக்கு நீங்க எங்க வீட்டுக்கு முன்னாடி இன்று நீங்க என்னை திட்டினதை மறக்கவே முடியலைப்பா....

அப்பா எதுக்காக அப்பிடி ஒரு பாசம் வைச்சிங்க.என்னை இப்பிடி அவைக்கதானா??? நான் அழுதாலே  பிடிக்காது பிடிக்காது என்று சொல்லுற  நீங்கள் மட்டும் எப்பிடி இப்பிடி ஒரு அழுகையை தந்தீங்க அப்பா.நீங்க என்னை எப்ப பார்க்க வருவிங்க அப்பா.உங்க கிட்ட ரகசியமா ஒன்று சொல்லணும்.


ம்ம்மம்மம்ம்ம்ம்...அப்பா உங்களுக்கு நிறைய சொல்லணும் அப்பா..எப்ப வருவிங்க .......வருவிங்க தானே...இன்றைக்கு ...நாளைக்கு..நாளை இன்றைக்கு ..
ம்ம்ம்ம்ம்ம் ...நீங்க வருவிங்க ஆனால் பேசமாட்டின்கள்..என்கூட பேசினால் உங்களாலை என்னை விட்டு மறுபடியும் போகமுடியாது..எனக்கு தெரியும் .அதுதானே...எனக்கு உங்க பாசம் தெரியும் ..அப்பா ..அப்பா ...உங்களுக்கு நிறைய சொல்லணும் ..


எப்ப வருவிங்க..


வருவிங்க தானே......



இப்படிக்கு உங்க 
...............................

6 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரி,
    ‘’எழுதிச் செல்லும் விதியின் கை, எழுதி எழுதி மேற் செல்லும் அழுத கண்ணீர் ஆறெல்லாம் அதில் ஓர் எழுத்தை அழித்திடுமா?

    நிஜங்களின் பிரதிபலிப்பாகவும், ஆழ்மனவோட்டத்தின் விம்பமாகவும் விளங்கும் பதிவினைப் படித்தேன். இந்தச் சோகத்தினை ஆற்ற வார்த்தைகள் போதாது. உங்கள் தந்தையால் தான் இச் சோகத்தினை ஆற்ற முடியும். வெகு விரைவில் உங்கள் எதிர்பார்ப்புக்களும், இக் கடித்தத்திலுள்ள வேண்டுகோளும் நிறைவேறட்டும்.

    பதிலளிநீக்கு
  2. என்ன சொல்வதேன்றே தெரியல சகோதரி என்னை பேச்சாளனாக்கிய ஒரு குரு அவர் முகத்தை பார்க்க ஆசையாகவே இருக்கிறது...

    பதிலளிநீக்கு
  3. சகோதரம் வினு அவர்களே..தங்கள் வருகைக்கு மிகவும் நன்றி ..என்றும் வரவேற்கிறேன்

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரன் நிருபன் ..
    வருவார் வருவார் என காத்திருந்தேன் ..
    வரமாலே சென்றுவிட்டார் ..
    வரமுடியா தூரத்துக்கு ..
    ஆம் கால ஓட்டத்தில் நான் அவரிடம் சென்றால் என் உள்ள குமுறல்களை கூறுவேன் ..தினம் தினம் என்னை பார்த்துகொண்டிருக்கிறார் என்ற நம்பிக்கையில் வரைந்தேன் என் தந்தைக்கு ஒரு மடல்.

    பதிலளிநீக்கு
  5. சகோதரம் மதி...

    கால ஓட்டத்தில்
    கரைகின்ற என் கண்ணீர் கூட என் தந்தையை தேடுகின்றன ..

    ஆம் ,சந்திக்க முடிந்தால் தங்கள் ஆசையை நிச்சயம் உங்கள் குருவுக்கு சொல்வேன் .

    பதிலளிநீக்கு