வெள்ளி, மார்ச் 4

நியூசிலாந்து அபார வெற்றி


நியூசிலாந்து, ஜிம்பாப்வே இடையே இன்று அகமதாபாத் மைதானத்தில் போட்டி நடந்தது. ஜிம்பாப்வே அணி டாஸ் ஜெயித்து பேட்டிங்கை தேர்வு செய்தது.

டெய்லர், கோவன்டரி தொடக்க வீரர்களாக இறங்கினார்கள். 2 பந்துகளை மட்டும் சந்தித்த கோவன்டரி ரன் எதுவும் எடுக்காமலே அவுட் ஆகி வெளியேறினார்.
அடுத்து வந்த தைபூ 8 ரன்களிலும், எர்வின் 11 ரன்களிலும், சிகும்புரா 1 ரன்னிலும் மற்றும் சகாபபா ரன் எடுக்காமலும் அவுட் ஆனார்கள். 15 ஓவரிலேயே 5 விக்கெட்டுகளும் வீழ்ந்து விட்டது. இதனால் ஜிம்பாப்வே அணி தடுமாற்றத்துடன் ஆடியது. டெய்லர் மட்டும் நிலைத்து நின்று ஆடினார். ஆனாலும் அவர் 44 ரன்களில் ஆட்டம் இழந்தார்.
அடுத்து வந்த லெம்ப் 18 ரன்னிலும் ரன்அவுட் ஆனார். கிரம்மர் 22 ரன்னிலும், பிரைஸ் 11 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். 46.2 ஓவரில் ஜிம்பாப்வே ஆல் அவுட்டாகி 162 ரன்கள் எடுத்தது.
163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து அணி 33.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 166 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.
தொடக்க வீரர்கள் பிரன்டன் மெக்கல்லம் 95 பந்தில் 6 பவுண்டரி 2 சிக்சருடன் 76 ரன்களும், கப்தில் 108 பந்தில் 7 பவுண்டரி 2 சிக்சருடன் 86 ரன்களும் எடுத்தனர்.















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக